பிரா அணிவது நல்லதா...? ஆபத்தா..? இது பெண்களுக்கு மட்டும்...!

First Published Apr 29, 2018, 6:24 PM IST
Highlights
using bra is good or bad for laddies only


பெண்கள் பலர், பிரா அணியாமல் இருந்தால், தங்களுடைய மார்பகங்கள் தொய்வடைவதாக எண்ணுவதாலேயே, அதனை சவுகர்யமாக உணராவிட்டாலும் தொடர்ந்து பயன் படுத்தி வருவதாக சமீபத்தில் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து கலிபோர்னியாவின் பெண்கள் ஆரோக்கிய நிபுணரான பேட்ரிக்கா கிராகத்தி, என்பவர் கூறுகையில் 'பிரா அணியாமல் இருப்பது மட்டும் தான் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என தெரிவித்துள்ளார்.

சுமார் 15 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், பிரா அணிவதால் பெண்களுக்கு கூடுதல் பலன் எதுவும் இல்லை என்றும் மாறாக பதிப்பே அதிகமாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து 18 வயது முதல் 35 வயது வரை உள்ள சுமார் 300 பெண்களிடம் நடத்திய ஆய்வில் பிரா அணியாத பெண்களுக்கு மார்பகத்தை தாங்கும் இயற்கை சதைகள் வளர்ந்துள்ளது. ஆனால் தொடர்ந்து [பிரா அணிந்து வரும் பெண்களுக்கு இந்த சதை வளர்ச்சி குறைத்துள்ளது எனபதால் இயற்கையாகவே பெண்கள் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பிரா அணிந்து வரும் பெண்கள் தற்போது இதை நிறுத்துவதால் எந்த பலனும் ஏற்படுவது இல்லை என்றும் மார்பகங்கள் தொய்வு என்பது எத்தனை முறை பெண்கள் கர்பமாகிறார்கள் என்பதை பொருத்து தான் உள்ளதே தவிர பிரா அணியாமல் இருப்பதால் இல்லை என்றும் கிராகத்தி தெளிவாக கூறியுள்ளார். 

click me!