ஹனுமனின் மறுபிறவியாக பார்க்கப்படும் சிறுவன்...! உடலில் ஏற்படும் மாற்றம்...! விளைவு தெரியாமல் வணங்கும் மக்கள்...?

First Published Apr 28, 2018, 1:21 PM IST
Highlights
The boy who is seen as Gods reincarnation


இந்துக்கள் ஆர்த்மாத்தமாக வணங்கும் கடவுள்களில், மிகவும் முக்கியமானவர் ஹனுமன். தங்களுக்கு நல்ல பலம் வேண்டும், தங்களை சுற்றி நிறைந்துள்ள கெட்ட சக்திகள் அழிந்து விட வேண்டும் என ஹனுமனை நம்பி வணங்குகின்றனர் கோடிக்கணக்கான மக்கள்.

கடவுளின் மறு பிறவி:

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய தம்பதிகளுக்கு சொஹாலி ஷா என்கிற 13 வயது மகன் உள்ளார். 

சொஹாலி ஷா பிறக்கும் போதே அவருடைய முதுகு பகுதியில், வால் போன்ற பகுதியும் அதனை சுற்றி முடிகளும் இருந்துள்ளது. ஆனால் இந்த சிறுவன் பார்பதற்கு மற்ற சிறுவர்களை போல் தான் இருந்துள்ளான். 

இருப்பினும், இந்த சிறுவன் வளர வளர, ஹனுமனுக்கு வால் வளர்வது போல்... அந்த சிறுவன் முதுகில் உள்ள வாலும் வளர்ந்துள்ளது. இந்த சிறுவனை பார்த்த இந்து மதத்தை சேர்ந்த மக்கள், கடவுளின் மறு பிறவி என இவனை வணங்க துவங்கினர்.

மேலும், இந்த சிறுவனை பார்க்க காலை நேரங்களில் இவர்களுடைய வீட்டின் முன் மக்கள் கூடுகின்றனர். சிறுவனிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, அவருக்கு வாழைப்பழம் மற்றும் மாம்பழங்கள் காணிக்கையாக கொடுத்து செல்கின்றனர். 

சிலர், நல்ல விஷயங்களுக்கு செல்லும் போது இந்த சிறுவனை பார்த்து செல்வது நல்ல சகுனம் என நம்புகின்றனர். 

இது குறித்து சொஹாலி ஷாவின் பெற்றோர் கூறுகையில்...

தாங்கள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தங்களுடைய மகனை பல இந்து மக்கள், கடவுளின் மறு பிறவி என பார்ப்பது தங்களுக்கு சந்தோஷமாக இருப்பதாகவும், இது தங்களுடைய மகனுக்கு கிடைத்த ஆசீர்வாதமாக பார்ப்பதாகவும் கூறுகின்றனர்.

வால் முளைக்க காரணம் என்ன?

இந்த சிறுவனுக்கு, இப்படி வால் முளைக்க காரணம் என்ன என மருத்துவர்கள் கூறுகையில், இது நரம்பு குழாய் குறைப்பாட்டின் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு தகுந்த சிகிச்சை பெற்றால் வருங்காலத்தில் இதனால் எந்த பாதிப்பும் சிறுவனுக்கு ஏற்ப்படாமல் தவிர்க்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

ஆனால் இது குறித்து அவரது குடும்பத்தினர் எந்த கவலையும் இல்லாமல் அதற்கு உரிய சிகிச்சைகள் எடுக்காமல் இருக்கின்றனர். சிறுவன் சொஹாலியும் அந்த வால் இருக்கும் இடத்தில் எந்த மாற்றத்தையும் உணர்வதில்லை என்பது வருத்தம். 

மேலும் மக்கள் தன்னை கடவுளின் மறு பிறவியாக பார்ப்பது, தான் செய்த அதிர்ஷ்டம் என்றும் சிரித்துக்கொண்டே கூறுகிறார் சொஹாலி ஷா.   

click me!