திருப்பதி செல்ல புதிய விதிமுறை...! ஒரு முறை இதை படித்துவிட்டு செல்லுங்கள்..!

First Published Apr 28, 2018, 5:51 PM IST
Highlights
new rules to go thirupathi temple


திருப்பதி செல்ல புதிய விதிமுறை...! ஒரு முறை இதை படித்துவிட்டு செல்லுங்கள்..!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் இலவச தரிசன  பக்தர்களுக்கு நேரம் குறிப்பிட்ட அனுமதி அட்டை வழங்கும் பணி தற்போது பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டு உள்ளது

முன்பு போன்று நீங்க காத்திருந்த ஏழுமலையானை தரிசிக்கும் காலம் சென்று அதிக நேரம் காத்திருக்காமல் எளிதில் சாமியை தரிசனம் செய்ய டைம் ஸ்லாட் போட்ட அட்டை நேற்று முன்தினம் முதல் சோதனையில்   தொடங்கப்பட்டு உள்ளது

டைம் ஸ்லாட் முறையயான தரிசன அட்டை

டைம் ஸ்லாட்  முறையிலான தரிசன அனுமதியை பெற விரும்பும்   பக்தர்கள் ஆதார் அட்டை மற்றும் வாக்களார் அட்டை இவை இரண்டில் ஏதாவது ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்கிறது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்

இந்த இரண்டு அட்டைகளும் இல்லை என்றால், திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்பிளக்ஸில் தங்கி ஓய்வெடுத்து வழக்கம் போல  இலவச தரிசனம் செய்யலாம்

பல முக்கிய திட்டங்கள் மற்றும் அரசு நல திட்டங்கள் வரையிலும்,  வங்கி கணக்கு முதல் அனைத்தும் ஆதார் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம் என கூற முடியாது என்பதால், தற்போது வாக்களர் அட்டை இருந்தாலும்  பரவாயில்லை என்ற நோக்கில் சோதனை முறையில் இந்த திட்டம்  நடை முறையில் உள்ளது

எனவே பக்தர்கள் திருப்பதிக்கு செல்லும் போது மறக்காமல் ஆதார் அட்டை அல்லது வாக்களார் அட்டை எடுத்து செல்வது நல்லது. 

click me!