Coconut water: தெய்வத்திற்கு தேங்காய் உடைக்கும் போது...இனி தேங்காய் தண்ணீரை இந்த முறைகளில் பயன்படுத்துங்கள்..!

By Anu KanFirst Published Mar 13, 2022, 7:07 AM IST
Highlights

Coconut water: நம் முன்னோர்களின் தொன்று தொட்டு, பாரம்பரியமாக தெய்வத்திற்கு தேங்காய் உடைத்து பூஜை செய்யும் வழிமுறைகள்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நம் முன்னோர்களின் தொன்று தொட்டு, பாரம்பரியமாக தெய்வத்திற்கு தேங்காய் உடைத்து பூஜை செய்யும் வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வினைகள் தீர்க்கும் கணபதிக்கு தேங்காய் உடைப்பதை மிகவும் விசேஷமாக பக்தர்கள் கடைபிடித்து வரும் ஒரு விஷயமாக இருக்கிறது. அப்படி தேங்காய் உடைக்கும் போது, பெரும்பாலும் நாம் தேங்காய் தண்ணீரை கீழே விடுவோம். இனி தேங்காய் உடைக்கும் போது அப்படி செய்யாமல், கீழே சொன்ன வழிமுறைகளை கடைபிடுங்கள்.

தேங்காய் உடைக்கும் போது, தேங்காய் அழுகிப் போகாமல் நல்ல தேங்காயாக இருந்தால், வேண்டிய வேண்டுதல் அப்படியே நிறைவேறும் என்பது ஐதீகம்.

தேங்காயில் பூ இருந்தால் நல்ல சகுனம் என்றும், தேங்காயில் அழுகல் இருந்தால் கெட்ட சகுனம் என்றும் சகுன சாஸ்திரங்கள் வலி வழியாக பின்பற்றுகின்றனர். இவ்வளவு மகத்துவம் நிறைந்த தேங்காயை பூஜைக்காக நாம் உடைக்கும் போது, அவற்றின் தேங்காய் தண்ணீரையும் பூஜைக்காக பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம்.

வாருங்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

1. நம்முடைய முன்னோர்களின் வழக்கப்படி, வீட்டில் பூஜை செய்கிறீர்கள் என்றால் நீங்கள் தேங்காய் உடைக்கும் போது தேங்காயின் முக்கண்களுக்கு நேரே இருக்கும் நரம்பில் ஒரு அடி அடித்தால் சரி பாதியாக உடைந்துவிடும். அது உடையும் பொழுது ஒரு மூடியில் அதன் தண்ணீரை தேக்கி வைத்து கொள்ள வேண்டும். 

2. அப்படியாக, இருக்கும் தண்ணீரை ஒரு தம்ளரில் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜைக்கு தேங்காய் வைத்து அதன் பிரசாதமாக இந்த தண்ணீரையும் எந்த தெய்வத்திற்கு படைக்கிறீர்களோ, அந்த தெய்வத்துக்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.

3. பின்னர், நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காண்பித்த பிறகு தண்ணீரை மூன்று முறை சுற்றி பூமியில் ஊற்றுவது வேண்டும். அப்படி பூஜை செய்யும் பொழுது நீங்கள் இந்த தேங்காய் தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். 

4. பின்னர், மீதம் இருக்கும் தண்ணீரை பூஜை முடித்த பிறகு தீர்த்தமாக அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுக்க வேண்டும். அப்போது தான் உங்களின் பூஜை முழுமையாக நிறைவு பெறும்.

தேங்காய் தண்ணீரின் அற்புத பயன்கள்:

வெயில் காலத்திற்கு தேங்காய் தண்ணீர் அருமையான பானம் ஆகும். இது, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. முதலில், உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. சிறுநீர பாதையை தூய்மைப்படுத்தும். 

அதுமட்டுமின்றி, செரிமான கோளாறு, தலைவலி, உடல் எடை அதிகரிப்பு, தைராய்டு, பசி, தாகம் அத்தனையும் தீர்க்கும் வல்லமை இதற்கு உண்டு. 

மேலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை நீக்கி, சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளை ஒழித்து கட்டும் சக்தியும் இதற்கு உண்டு. எனவே, இனிமேல் தேங்காய் தண்ணீரை வீணடிக்காமல்  முறையாக பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க...Today astrology: குரு பெயர்ச்சியால்...இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான நாள்..! இன்றைய ராசி பலன்...!!

click me!