Travel: பர்வதமலையில் மறைக்கப்பட்ட மர்மங்கள்..திகிலாக ஒரு வழி பாதை..நாய்கள் உருவில் துணையாய் வரும் சித்தர்கள்!

By Anu KanFirst Published Mar 12, 2022, 2:33 PM IST
Highlights

Tiruvannamalai Parvathamalai: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் உள்ள திகில் நிறைந்த பர்வத மலை, செங்கத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் உள்ள பர்வத மலை, செங்கத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது தென் கயிலை, சஞ்சீவிகிரி, பர்வதகிரி, கந்த மலை, நவிர மலை,  திரிசூலகிரி, மல்லிகார்ஜுன மலை என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

சித்தர்களின் புகழ்பெற்ற மலை:

பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை என்ற பொருளை கொண்டுள்ளது. மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளை போன்றே இந்த பர்வத மலையும் சித்தர்களின் புகழ்பெற்ற மலை என்று சொல்லப்படுகிறது. 

பர்வத மலையின் மற்றுமொரு சிவன் தலம்:

 

பர்வத மலை, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மற்றுமொரு சிவன் தலம் என்றழைக்கப்படுகிறது. இது மிகவும் தொன்மையான ஒன்றாகும். இந்த மலையின் மீது உள்ள அருள்மிகு மல்லிகார் ஜுனரும், அன்னை பிரம்மராம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிகிறார்கள்.சுமார் 5,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட,  இந்த பர்வத மலையில் அரியவகை மரங்களும், ஏராளமான மூலிகைச் செடிகளும் பெருமளவு உள்ளன. இந்த மலை 2855 அடி உயரம் கொண்டது. 

ஜவ்வாது மலையின் கிளை மலை:

இந்த மலை ஜவ்வாது மலையின் கிளை மலையாகும். இந்த மலையில் 3 குன்றுகள் உள்ளன. கோயில் அமைந்துள்ள பகுதியே மிகவும் உயரமான பகுதியாகும்.இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும், பல்லாயிரம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மேலும், இந்த மலையின் கீழ் ஆதிவாசிகள் வாழ்வதாக சொல்கிறார்கள். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.  அதேபோன்று, இந்த கோயிலை சுற்றி ஒரு பழங்காலத்து கோட்டையும் உள்ளது. இது நன்னன் என்ற குறுநில மன்னன் கட்டியது என்கிறார்கள்.

செல்வதற்கு திகிலான ஒரு வழி பாதை:

 

இந்த மலையில் சில தூரத்திற்கு படிக்கட்டுகள் நிறைந்திருக்கும். மேலும், பர்வதமலையில் செய்யாற்றின் கிளை ஆறுகள் பாய்கின்றன. இங்கு, போவதற்கு ஒரு வழி, திரும்பி வருவதற்கு ஒரு வழி  பயன்படுத்தப்படுகிறது. இதன் ஒரு வழி பாதை, திகில் நிறைந்த ஒன்றாக இருக்கும்.  இதை கடக்கும் வரை ஆழமான பள்ளத்தாக்காகவே இருக்கும். இம்மலைப் பகுதியில் அற்புதமான மூலிகைகள் பல உள்ளன. இவற்றை சுவாசிக்க மக்கள் அதிகளவில் இங்கு வருகிறார்கள். 

நாய்கள் உருவில் துணைக்கு வரும் சித்தர்கள்:

இங்கு, சித்தர் பெருமக்கள் வாழ்ந்த குகைகளும் உள்ளன. அந்தக் குகைகளில் தற்போதும் சித்தர் பெருமக்கள் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த பாதையில் மலையேறுபவர்களுக்கு நாய்கள் வழித்துணையாக வருகின்றதாம். இந்த நாய்கள் குகையில் வாழும் சித்தர்களின் அம்சம் என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்த கதவுகள் இல்லாத, கோவிலுக்கென்று தனியாக அர்ச்சகர்கள் யாரும் கிடையாதாம்.ஆனால் அம்பாள் சந்நிதியில் சாது ஒருவர் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்குப் பிரசாதம் மட்டும் தருகிறார் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க...Today astrology: இன்று முதல் மார்ச் 15 வரை இந்த ராசிக்காரர்களின் தலை விதி தலைகீழாக மாறும்! இன்றைய ராசி பலன்!

click me!