Today astrology: குரு பெயர்ச்சியால்...இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான நாள்..! இன்றைய ராசி பலன்...!!

Anija Kannan   | Asianet News
Published : Mar 13, 2022, 06:28 AM IST
Today astrology: குரு பெயர்ச்சியால்...இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான நாள்..! இன்றைய ராசி பலன்...!!

சுருக்கம்

Today astrology: கிரகங்களின் மாற்றம் அனைத்து, ராசிக்காரர்களையும் பாதிக்கும், ஆனால், அதன் தாக்கம் சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு ஆபத்தாகவும் இருக்கும் அது யார் யாருக்கு என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.

கிரகங்களின் மாற்றம் அனைத்து, ராசிக்காரர்களையும் பாதிக்கும், ஆனால், அதன் தாக்கம் சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு ஆபத்தாகவும் இருக்கும் அது யார் யாருக்கு என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில், கிரகங்களின் மாற்றம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகம் பங்குச்சந்தை, பயணங்கள், ஆன்மீக பயணங்கள், வெளிநாட்டு பயணம், தொற்றுநோய்கள், அரசியல் போன்றவற்றுடன் தொடர்புடையது.  

குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே தனது ராசியை மாற்றுகிறார். அவர் ஏப்ரல் 13ஆம் தேதி வியாழன் ராசியை மாற்றப் போகிறார்.இந்த நாளில் குரு தனது சொந்த ராசியான மீனத்தில் நுழைவார். இதன் காரணமாக அனைத்து ராசிக்காரர்களும் பாதிக்கப்படுவார்கள், ஆனால் சில ராசிக்கு சிறப்பு பலன் பெறலாம். இந்த வியாழன் மாற்றம் எந்ததெந்த  ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் தரும், என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.

மகரம்: 

உங்களைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சி உங்களை கடினமாக உழைக்க வைக்கும். இது வருமான வீடாகக் கருதப்படுவதால், இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரித்து, பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அதே நேரத்தில், வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் முடிவடையும். அரசியலில் ஈடுபடுபவர்கள் பல உயர் பதவிகளைப் பெறலாம். 

விருச்சிகம்: 

பணியிடத்தில் நீங்கள் செய்யும் பணி பாராட்டப்படும். புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.பணச் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.அதுமட்டுமின்றி, இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். ஆனால், முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கடகம்: 

உங்களுக்கு வியாழன் ராசி மாற்றம் கலவையாக இருக்கும். இந்த ராசியில் குரு  ஒன்பதாம் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்துக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால் இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். 

சிம்மம்: 

வியாபாரத்தில் முன்பை விட நிலைமைகள் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம், ஆனால் அதிகம் கவலைப்பட தேவையில்லை. நீண்ட நாட்களாக மந்தமாக இருந்த வியாபாரமும் வேகமெடுக்கும். உணவகங்கள், தானியங்கள் அல்லது உணவு மற்றும் பானங்கள் தொடர்பான வணிகத்தில் உள்ள வணிகர்களும் சிறப்புப் பலன்களைப் பெறலாம்.

கும்பம்: 

இந்த ராசிக்காரர்களுக்கு வியாழன் பண பலன்களைத் தருவார். பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நேரம் அற்புதமாக இருக்கும்.இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் தொழிலில் புதிய உயரங்களை அடைவார்கள்.

மீனம்: 

இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் பாராட்டப்படுவார்கள், கௌரவமான பதவியைப் பெறுவார்கள். மீன ராசிக்காரர்களின் ஜாதகத்தில் குரு இரண்டாம் ஸ்தானத்தில் வரவுள்ளார். இது பணம் மற்றும் பேச்சுக்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை நன்றாக இருக்கும். திடீர் பண ஆதாயம் கூடும். 

துலாம்: 

வேலை மற்றும் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். மேலும், துலாம்  ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சிக்கிய பணத்தையும் மீட்டெடுக்க முடியும். வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் அல்லது மார்க்கெட்டிங் துறையில் தொடர்புடையவர்கள் சிறப்புப் பலன்களைப் பெறலாம். அரசியலில் இருப்பவர்கள் பெரிய பதவிகளை பெறக்கூடும். 

மேலும் படிக்க...Today astrology: இன்று முதல் மார்ச் 15 வரை இந்த ராசிக்காரர்களின் தலை விதி தலைகீழாக மாறும்! இன்றைய ராசி பலன்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்