
தற்போதைய சூழ்நிலையில் குற்ற சம்பவங்கள் பெரிதும் நடைபெற்று வருகின்றன. இது போன்ற குற்ற செயல்களால் சமூகத்தில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. வறுமை காரணமாகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். மனசிதைவால், இயற்கைக்கு மாறான குற்றங்களை புரியும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் குடிபோதையில் இரண்டு பேர் பசுமாட்டிடம் இயற்கைக்கு மாறாக நடந்து கொண்டதாக ஒருவர் காவல் துறையில் புகார் கூறியிருந்தார்.
ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் மதியம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் பசுமாட்டிடம், குடிபோதையில் இருந்த இரண்டு பேர் இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பசுமாடு அரண்டு சத்தம் போட்டதால், வரதராஜன் மற்றும் அருகில் இருந்தோர் அங்கு வந்தனர். அப்போது பசுமாட்டிடம் முறைகேடாக நடந்து கொண்ட ரத்தினம் என்பவரை பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பியோடிவிட்டார்.
இது குறித்து மாட்டின் உரிமையாளர், மாடு கட்டப்பட்டுள்ள இடம் அடிக்கடி மாற்றி மாற்றி கட்டப்பட்டதாலும், இரத்தம் சிந்தி கிடப்பதை பார்த்ததாலும், கண்காணிக்க முடிவு செய்ததாக கூறினார். சம்பவ நாள் அன்று, பசு மாடு கத்தும் சத்தம் கேட்டதை அடுத்து, தான் சென்று பார்த்ததாகவும், அப்போது இரண்டு பேர் பிறந்த மேனியோடு பசு மாட்டிடம் முறைகேடாக நடந்து கொண்டிருந்தனர். இதனைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் என்றார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று ஒரு சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது. பசு மாட்டுக்கு அல்ல.... கோழிக்கு... பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஜலல்பூர் பட்டியான் அருகே உள்ள கிராமம் ஒன்றில், தனக்கு சொந்தமான கோழியை 14 வயது சிறுவன் ஒருவன் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து பின்னர் கொன்று விட்டதாக ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுவன் கோழிக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொன்றது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, கோழிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுவன் இயற்கைக்கு மாறாக கோழியிடம் நடந்து கொண்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது என்று கூறினார். அந்த சிறுவன் மனரீதியாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளான் என்றும், இயற்கைக்கு மாறான குற்றம் புரிந்த பிரிவின் கீழ் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாகவும் கூறினார். மேலும், கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இயற்கைக்கு மாறாக விலங்குகளிடம் உறவு கொள்வதால் எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்கள் பரவியதாக கூறப்படும் நிலையில், மாடு, கோழி என்று மனிதர்களின் முறை தவறிய நடவடிக்கையால் மேலும் பல்வேறு விதமான நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செயலை, பல நாடுகள் குற்றம் என சட்டம் இயற்றியுள்ளனர். இந்தியாவில், இந்திய தண்டனை சட்டம் IPC377 ல் குற்றம் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த செயல் மனசிதைவு நோயின் வெளிப்பாடு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.