
திடீரென வற்றிய கிணறுகள்...சுனாமி அறிகுறியா???? இடத்தை காலி செய்யும் பொதுமக்கள்...!
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.... சுனாமி வந்தால் படையே இருக்காது அல்லவா..
இதற்கு முன்னதாக கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி அதிகாலை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இந்தியா, இலங்கை கடலோரப் பகுதிகளில் ஆழிப்பேரலை தாக்கியது. இதில் லட்சக்கணக்கனோர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளும் பாதிக்கப்பட்டன. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், குமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் கடற்கரையோரம் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் சுனாமி அலைகளில் சிக்கி உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் உடமைகளை இழந்தனர்.
இலங்கையில் சுனாமி அறிகுறியா..!
இலங்கையில் உள்ள, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளில் உள்ள பல கிணறுகள் திடீரென வற்றத் தொடங்கியுள்ளன
இதைக் கண்ட மக்கள், சுனாமி பீதியில் தங்கள் இருப்பிடங்களைக் காலி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.ஆனால், சுனாமி ஆபத்து இல்லை என அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும், கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவிற்கு முன், இதேபோல் பல கிணறுகள் வற்றிப் போனது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று தற்போது கிணற்றில் திடீரென தண்ணீர் வற்றி உள்ளதால் மீண்டும் சுனாமி வருமா என்ற பீதி கிளம்பியுள்ளது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.