உங்களுக்கு இந்த நாள் எப்படி இருக்கும் தெரியுமா ? 12 ராசிக்கும் சின்ன சின்ன பாய்ண்ட்...!

 
Published : Nov 14, 2017, 10:50 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
உங்களுக்கு இந்த நாள் எப்படி இருக்கும் தெரியுமா ? 12 ராசிக்கும் சின்ன சின்ன பாய்ண்ட்...!

சுருக்கம்

how will be our horoscope today

ஜாதகத்தில்  எனக்கு  நம்பிக்கை இல்லை ... கடவுள் பக்தி இல்லை ...நான் சாமானியன் ..எதிலும் நம்பிக்கை இல்லாதவன் எனபலரும் சொல்வதை கேட்டிருப்போம். ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து எதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே  இருந்தால், நமக்கு டைம் சரி இல்லையோ  என  நினைக்க  தொடங்கி  விடுவார்கள்..

பின்னர் ஜாதகம் பார்க்கலாமா என நினைக்க தோன்றும்....சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் .....ஒவ்வொரு ராசிகாரர்களுக்கு இன்று எப்படி  நாள்  இருக்கும்னு பார்க்கலாம் வாங்க..... 

மேஷம் : தொட்டது துலங்கும் நாள்.

உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு 
 
ரிஷபம் :நினைத்தது நிறைவேறும் நாள்.
  
 குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.  

மிதுனம்:   உழைப்பால் உயரும் நாள்.
  
எதிர்ப்புகள் அடங்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

கடகம்:   வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார் கள். அரசால் அனுகூலம் உண்டு
உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.
 
சிம்மம்: புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
   
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். அழகு, இளமை கூடும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியா பாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.  

கன்னி: பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
  
 ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை, உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும்.  

துலாம்: தடைகளை தாண்டி முன்னேறும் நாள்

வேலைகளை உடனே முடிக்க வேண்டு மென நினைப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத் துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்..

விருச்சிகம்: மதிப்புக் கூடும் நாள்.

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணம் வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோ கத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

 தனுசு: முயற்சிகள் பலித மாகும் நாள்.

உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். 

மகரம்: தடைகள் உடை படும் நாள்.

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். தொழில், உத்யோகத் தில் திருப்தி உண்டாகும். 

கும்பம்: போராட்டமான நாள்.

சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். 

மீனம்: நன்மை கிட்டும் நாள்.

உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பழைய சிக்கல் களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க