
தீர்த்து வைக்க முடியாத பிரச்னை ஏற்படும் போது காவல் நிலையத்தை அணுகுவது தான் கடைசி ஆப்ஷனாக இருக்கும் அல்லவா?அவ்வாறு காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கும் முன்பாக இதனை ஒரு முறை படித்து பாருங்கள்...
காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கக்கூடிய புகார்களை, காவல் நிலைய அதிகாரி அவர்கள் இரண்டு வகைகளாக பிரித்து கையாள வேண்டும் என்று Criminal Procedure Code (சுருக்கமாக Cr.P.C) என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய குற்றவிசாரணை முறைச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இரண்டு வகையான குற்றம் :
அ) கைது செய்யப்பட வேண்டிய குற்றம்
ஆ) கைது செய்யப்பட தேவையில்லைத குற்றம்
கைது செய்யபட வேண்டிய குற்றம் (Cognizable Offence)
தன்னிச்சையாக கைது செய்யும் அதிகாரம் :
இந்திய தண்டணைச் சட்டத்தில் உள்ள பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில குற்றச் செயல்களைச் செய்தவர்களை, அல்லது அவ்வாறு செய்துள்ளது பற்றி தக்க ஆதாரங்களின் அடிப்படையில் பொதுமக்களில் எவரேனும் தன்னிடம் (Cr.P.C - 154ன் கீழ்) செய்த புகாரின் அடிப்படையில்,அந்த நபரை காவல் துறை அதிகாரி கைது செய்யலாம்.இதற்காக Cr.P.C - 41ன் கீழ் யாருடைய உத்தரவுமின்றி தன்னிச்சையாக கைது செய்யும் அதிகாரம் காவல் துறைக்கு உண்டாம்.
கைது செய்யப்பட தேவையில்லாத குற்றம் ( Non Cognizable Offence)
இந்திய தண்டணைச் சட்டத்தில் உள்ள பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில குற்றச் செயல்களைச் செய்தவர்களைப் பற்றி பொதுமக்களில் எவரேனும் காவல் துறையிடம் புகார் செய்தால், அந்தப் புகார் செய்தவரையும், புகாரையும் (Cr.P.C - 155ன் கீழ்) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
Cr.P.C - 41ன் கீழ் கைது செய்யாமலிருந்தால்?
“கோர்ட் டைரக்ஷன்”
கைது செய்யப்பட வேண்டிய குற்றம் செய்தவர்களை, உரிய ஆவணங்களுடன் காவல்துறையினரிடம் புகார் செய்தும், அந்தப்புகார் சம்பந்தமாக ஏதும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலும், குற்றவாளிகளை காவல்துறை அதிகாரி கைது செய்யாமல் இருந்தாலும், நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வேண்டும். இந்த சட்ட நடவடிக்கை எடுப்பதைத்தான் “கோர்ட் டைரக்ஷன்” என்று சொல்கிறார்கள்.
இதனைப் பற்றி Cr.P.C - பிரிவு 2(ஈ), Cr.P.C - பிரிவு 156(3) லும், மற்றும் Cr.P.C - பிரிவு 190 (1)இ- லும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடுத்த பதிப்பில் இது குறித்து விரிவாக பார்க்கலாம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.