Surya grahan: சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் குருவின் பார்வை பெற்ற ராசிகள்...தவிர்க்கும் வழிமுறைகள் என்ன..?

By Anu KanFirst Published Apr 23, 2022, 6:30 AM IST
Highlights

Surya grahan: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் பாதிப்பை தவிர்க்கும் வழிமுறைகள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், 2022 ஆம் ஆண்டு சனி அமாவாசை நாளான சனிக்கிழமை ஏப்ரல் 30 ம் தேதி சரியாக நள்ளிரவு 12:30 மணிக்கு துவங்கி அதிகாலை  4 மணி வரை நிகழும்.   

ஜோதிடத்தின் படி, சனி புதனுடன் சேர்ந்திருந்தால் சூரிய கிரகணத்தால் சிக்கல் இல்லை. அதுவே, சனி கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம் அல்லது மூலம் நட்சத்திரத்தில் இருந்து குருவின் பார்வை பெற்றவர்கள் இந்த சூரிய கிரகணத்தின்போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.குறிப்பாக கர்ப்பிணிகள்  இந்த நேரத்தில் அதிக கவனமாக  வேண்டும்.

மேஷ ராசியில் சூரியன், சந்திரன், ராகு மூவரும் இணைகின்றனர். இந்த சூரிய கிரகணம் தாக்கத்தில் இருந்து  மேஷம், விருச்சகம், கடகம் ராசியினர் மிகவும் எச்சரிக்கையாக  வேண்டும். 

சூரிய கிரகணத்தின் பாதிப்பை தவிர்க்கும் வழிமுறைகள்:

1. இந்த நேரத்தில் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். புதிய திட்டங்களை எதுவும் செயல்படுத்தாமல் இருப்பதே நல்லது. சந்திரன் மனோகாரகன் என்பதால் மன சஞ்சலம் தரக் கூடியவாரக இருப்பார் என்பதால் கவனம் தேவை.

2. இந்த நாளில், காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது நல்லது. மேலும், குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் கிரஹன நேரத்தில் வழிபடுவது நல்லது. 

3. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில், செரிமான கோளாறு ஏற்பட்ட வாய்ப்பு அதிகம். கர்ப்பிணிகளும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. முடிந்தால் தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். 

4. சூரிய கிரகணத்தின் போது தீய கதிர்வீச்சுக்கள் வெளியாகும் என்பதால், கிரகண நேரத்தில் யாரும் வெளியில் வராமல் இருப்பது நல்லது. குறிப்பாக கர்ப்பிணிகள் வராமல் இருப்பது அவசியம். 

மேலும் படிக்க...Horoscope: ஏப்ரல் 30 ம் தேதி நிகழும் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்...உஷாராக இருக்க வேண்டிய 3 ராசிகள்...

click me!