Horoscope: ஏப்ரல் 30 ம் தேதி நிகழும் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்...உஷாராக இருக்க வேண்டிய 3 ராசிகள்...

Anija Kannan   | Asianet News
Published : Apr 22, 2022, 08:00 AM IST
Horoscope: ஏப்ரல் 30 ம் தேதி நிகழும் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்...உஷாராக இருக்க வேண்டிய 3 ராசிகள்...

சுருக்கம்

Horoscope: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் காரணமாக கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் நிகழ்வு ‘சூரிய கிரகணம்’  என்றழைப்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தின் போது, குருவின் பார்வை பெற்றிருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதுவே சனி புதனுடன் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். 

சூரிய கிரகணம் 2022:

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், சனிக்கிழமை ஏப்ரல் 30 ம் தேதி சரியாக மதியம் 12:30 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நிகழும்.  இந்த கிரகணம் சனி அமாவாசை அன்று நடைபெறுவதாலும் அதற்கு ஒரு நாள் முன்னதாக சனி தனது ராசியை மாற்றிக் கொண்டிருப்பதாலும் மிகவும் முக்கியமானது.

எனவே, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் காரணமாக கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

மேஷம்:

இந்த ஆண்டு சூரிய கிரகணம் மேஷ ராசியில் நடப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் உஷாராக இருக்க வேண்டும். இந்த நாளில் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். மற்றவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிக்கல்கள் வந்து போகும். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். இந்த நாளில் நீங்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நாளில் மற்றவர்களின் பேச்சை கேட்காமல் இருப்பது அவசியம். சிந்தனையுடன் மற்றவர்களிடம் பேசுங்கள், ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து செயல்படுங்கள். உங்களுக்கு எதிரிகள் தீங்கு செய்ய முயற்சி செய்யலாம். செலவுகள் உண்டாகும். தொழிலில் நஷ்ட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்:

இந்த நாளில் ஏற்படும் சூரிய கிரகணம், கடகம் ராசியினரை நேரடியாக பாதிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு எடுக்கும் முடிவுகள் சரி என்று சொல்லி விட முடியாது.  நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். இந்த நேரத்தை பொறுமையாக எடுத்துக் கொள்வது நல்லது

மேலும் படிக்க...Horoscope: புதன் பெயர்ச்சி காரணமாக...அளவில்லாத அதிர்ஷ்ட யோகம் பெறப்போகும் 3 ராசிகள்..!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!