
சுக்கிரன் பெயர்ச்சி 2022:
ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு செல்கிறார். இப்பெயர்ச்சியால் மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரன் பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அன்னை லக்ஷ்மி சிறப்பான அருள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்கள் தடைபட்ட காரியங்கள் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி நிச்சயம். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வு இருக்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்கள் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்கள்மன நிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தொடர்ந்து தடைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு இருக்கும்.ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்வில் வெற்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு உறவு ஏற்படும். தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்கள் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். அரசியல் வாதிகளின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்கள் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை. கணவன்- மனைவி இடையே பனிப்போர் முடிவுக்கு வரும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்கள் மனதில் பட்டத்தை பளிச்சென்று பேசுவீர்கள். சுற்றியிருப்பவர்கள் உடைய சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பாக இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சில் இனிமை அவசியம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு அதிகம் செலவு செய்வீர்கள். மற்றவர்களுடைய பேச்சை கேட்டு எடுக்கும் முடிவுகள் ஆபத்தை கொடுக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கி வசூலாகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்கள் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். பெரிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். தேவையற்ற விமர்சனங்களை தகர்த்து எறிந்துவிட்டு வெற்றி நடை போடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நிதானம் அவசியம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்கள் இந்த நாள் நீங்கள் துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். திடீர் பண வரவு உண்டாகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்கள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மெல்ல மறையும். சிறு தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண விரயங்கள் ஏற்படலாம்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்கள் வீண் செலவுகளை தவிர்த்து விடுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயல்படுவீர்கள். பேச்சில் தன்னம்பிகை அதிகரிக்கும். பணியில் உத்தியோகஸ்தர்களுக்கு ஒத்துழைப்பை கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.நண்பர்களின் உதவி கிடைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.