Horoscope: சூரிய கிரகணம் நாளில், சூரியன் ராகுவின் நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து புதனுடன் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு பிரச்சனை இருக்காது. அதுவே குருவின் பார்வை பெற்றிருப்பவர்கள் இந்த சூரிய கிரகணத்தின்போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சூரிய கிரகணம் நாளில், சூரியன் ராகுவின் நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து புதனுடன் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு பிரச்சனை இருக்காது. அதுவே குருவின் பார்வை பெற்றிருப்பவர்கள் இந்த சூரிய கிரகணத்தின்போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கிரகணம் என்பது ஒரு சாதாரண வானிலை நிகழ்வு என கூறுகின்றனர்.இருப்பினும், இந்தியர்களைப் பொறுத்தவரையில் கிரகணம் என்பது ஒரு அசுப நிகழ்வு என நினைக்கின்றனர். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி நள்ளிரவு 12:15 மணிக்கு தொடங்கி அதிகாலை 04:08 மணி வரை இருக்கும். சூரிய கிரகண நாளில் யார் யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
undefined
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சற்று எச்சரிக்கை அவசியம். முடிவுகளை சிந்தித்து செயல்படுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும் என்பதால் சோர்வு தட்டும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கையிருப்பு கரையும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல், செலவு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயங்களில் பொறுப்பு அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு கணவன் -மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும்.
நீங்கள் உங்கள் சொந்த முடிவுகளை தைரியமாக எடுப்பது நல்லது. அடுத்தவர்களுடைய பேச்சைக் கேட்டு முடிவெடுத்தால் கூடுதல் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. திருமணத்தில் இருந்து வரும் குழப்பங்கள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்படும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிள்ளைகளின் பிடிவாதல் தளரும். தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த நீங்கள் அதிலிருந்து விடுபட இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை கிடைக்கும். இந்த நாள் உங்களுடைய கூட்டு முயற்சிகள் நல்ல பலன் கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பணத்தை கையாளும் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு பிரச்சனைகள் இருந்தாலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுப பலன்களைக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கூட்டு தொழில் புரிபவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டு. கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு வந்து நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகமாகஇருக்கும் இருக்கும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வார்த்தைகளை உபயோகிக்காமல் இருப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு எதிர் பாரத பண வரவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய நட்பு ஆதரவை கொடுக்கும். குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து செயல்படுவீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். தொலைதூரப் பயணங்கள் அனுகூல பலன் கொடுக்கும். நீங்கள் எதிர்பார்த்த பண வரவு உண்டாகும். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்யோன்யம் பெருகும்.