கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடையின் உரிமையாளர் டி.எஸ் கல்யாணராமன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
இந்தியாவில், பணக்கார தொழிலதிபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த கோடீஸ்வரர்களில் பலர் ஆடம்பரமான வாழ்க்கை முறையை நடத்தி வருகின்றனர். விலையுயர்ந்த கார்கள், ஜெட், ஹெலிகாப்டர் ஆகியவற்றை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடையின் உரிமையாளர் டி.எஸ் கல்யாணராமன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.
கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் கல்யாண் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக டி.எஸ்.கல்யாணராமன் உள்ளார். தொழில் அதிபரான இவர், தனது 12வது வயதிலேயே தனது தந்தையிடம் இருந்து தொழில் சார்ந்த பாடங்களை கற்றுக்கொண்டர். 1993ல் திருச்சூர் நகரில் தனது சொந்த நகை கடையை தொடங்கினார். அடுத்த சில ஆண்டுகளில் பில்லியன் டாலர் தொழிலாக அதனை மாற்றினார். கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 150 கடைகள் உள்ளன. அந்நிறுவனத்தின் வருவாய் $1.35 பில்லியன் டாலராக உள்ளது.
ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, கல்யாண ராமனின் நிகர மதிப்பு $1.5 பில்லியன் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12,000 கோடி ரூபாய். ஆடம்பரமான கார்கள் மீது ஆர்வம் கொண்ட கல்யாணராமன் மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருக்கிறார்., ஒரு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் சீரிஸ் I மற்றும் இரண்டு பாண்டம் சீரிஸ் II மாடல்களை வைத்திருக்கிறார். பிரிட்டிஷ் கார் நிறுவனத்தின் இந்த காரின் விலை ரூ.10 கோடி ஆகும். அவரின் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், வெள்ளை, கருப்பு மற்றும் சில்வர் வண்ணங்களில் உள்ளன.
விலையுயர்ந்த கார்கள் தவிர, Embraer Legacy 650, என்ற தனியார் ஜெட் விமானத்தையும் டி.எஸ் கல்யாண ராமன் சொந்தமாக வைத்திருக்கிறார். அதன் மதிப்பு ரூ.178 கோடி ஆகும். மேலும் Bell 427 ஹெலிகாப்டருக்கு சொந்தக்காரர் என்ற பெருமையையும் டி.எஸ் கல்யாண ராமன் பெற்றூள்ளார். கனடாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரின் விலை சுமார் 48 கோடி ரூபாய்.
எல்லைகளைக் கடந்து அமெரிக்காவிற்கு தனது கல்யான் ஜூவல்லர்ஸ் கடையை விரிவுப்படுத்துவதே தனது நோக்கம் என்று கல்யாணராமனே ஒருமுறை கூறியுள்ளார். நகை வியாபாரத்தை தவிர தென்னிந்தியாவில் கல்யாண் டெவலப்பர்ஸ் திட்டங்களுடன் ரியல் எஸ்டேட் துறையிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.