அஸ்பார்டேம் செயற்கை இனிப்பு, புற்றுநோயைத் தவிர, செயற்கை இனிப்பு பலவிதமான ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரபலமான செயற்கை இனிப்பு வகையாக கருதப்படும் அஸ்பார்டேம் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என WHO அறிவித்துள்ளது. புற்றுநோயைத் தவிர, செயற்கை இனிப்பு பலவிதமான ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
1980களில் இருந்து உணவுப் பானங்கள், ஐஸ்கிரீம்கள், சூயிங் கம்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பிரபலமான செயற்கை இனிப்பு அஸ்பார்டேம், புற்றுநோயை உண்டாக்கும் பொருளாக உலக சுகாதார மையத்தால் அறிவிக்கப்பட்டது, ஆனால் மனிதர்களுக்கு புற்றுநோய்க்கான வரையறுக்கப்பட்ட ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது. அஸ்பார்டேம் ஆபத்து மற்றும் இடர் மதிப்பீடு முடிவுகள் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) உணவு சேர்க்கைகள் தொடர்பான கூட்டு நிபுணர் குழு (JECFA) ஆகியவற்றால் கூட்டாக வெளியிடப்பட்டது. ஆனால் அஸ்பார்டேம் புற்றுநோய் பயம் மட்டுமல்ல, தலைவலி, செரிமான கோளாறுகள், இருதய பிரச்சனைகளுக்கு ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற பல உடல்நல அபாயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
undefined
பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு அதிகரிக்கும் ஆபத்து.. அறிகுறிகள் என்ன? நோயை எப்படி தடுப்பது?
ஃபோர்டிஸ் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் மருத்து அமித் பார்கவா "அஸ்பார்டேம் என்பது ஒரு செயற்கை இனிப்பு ஆகும், இது பொதுவாக பல்வேறு உணவு மற்றும் பானங்களில் சர்க்கரை மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. அஸ்பார்டேம் மீது விரிவான அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டாலும், பெரும்பாலான ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தினசரி உட்கொள்ளும் அளவுகளில் நுகர்வுக்கு பாதுகாப்பானது என்று கண்டறிந்துள்ளன. இருப்பினும், புற்றுநோயைத் தவிர அஸ்பார்டேம் உட்கொள்வதால் சில உடல்நல அபாயங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
நீரிழிவு, தைராய்டு, உடல் பருமன் மற்றும் நாளமில்லா சுரப்பிக்கான மையத்தின் மூத்த இயக்குனர் டாக்டர் அசோக் குமார் ஜிங்கன் பேசிய போது “ இது சுக்ரோஸை விட 200 மடங்கு இனிப்பானது. இந்த பொருள் அஸ்பார்டிக் அமிலம், ஃபைனிலாலனைன் மற்றும் மெத்தனால் ஆகியவற்றால் ஆனது, இது மனித ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார். அஸ்பார்டேம் ஏற்படுத்தக்கூடிய உடல்நல அபாயங்களின் பட்டிலையும் நிபுணர்கள் பகிர்ந்து கொண்டனர்.
ஃபெனில்கெட்டோனூரியா (PKU)
ஃபைனில்கெட்டோனூரியா (PKU) எனப்படும் அரிய மரபணுக் கோளாறு உள்ள நபர்களுக்கு, அஸ்பார்டேமில் காணப்படும் அமினோ அமிலமான ஃபைனிலாலனைனை வளர்சிதை மாற்றுவதற்குத் தேவையான நொதி இல்லை. அஸ்பார்டேமில் ஃபைனிலாலனைன் உள்ளது. அதை உட்கொள்வது PKU உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அஸ்பார்டேம் கொண்ட உணவுகள் மற்றும் பானங்கள் பொதுவாக இந்த நிலையில் உள்ள நபர்களுக்கான எச்சரிக்கையுடன் லேபிளிடப்படுகின்றன.
தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி
சில நபர்கள் அஸ்பார்டேமுக்கு உணர்திறன் உடையவர்களாக இருக்கலாம். எனவே அஸ்பார்டேம் கொண்ட தயாரிப்புகளை உட்கொண்ட பிறகு தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியை அனுபவிக்கலாம். இருப்பினும், அஸ்பார்டேமை தலைவலியுடன் இணைக்கும் அறிவியல் சான்றுகள் வரையறுக்கப்பட்டவை.
ஒவ்வாமை எதிர்வினைகள்
அரிதாக இருந்தாலும், சிலருக்கு அஸ்பார்டேம் காரணமாக ஒவ்வாமை ஏற்படலாம். படை நோய், அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் அல்லது பிற ஒவ்வாமை எதிர்வினைகள் ஆகியவை சில அறிகுறிகளில் அடங்கும். அஸ்பார்டேமுக்கு ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.
இரைப்பை குடல் பிரச்சினைகள்
சில சந்தர்ப்பங்களில், அஸ்பார்டேமின் அதிகப்படியான நுகர்வு வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலி போன்ற இரைப்பை குடல் அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். இந்த அறிகுறிகள் பொதுவாக லேசானவை மற்றும் அஸ்பார்டேம் உட்கொள்ளல் குறைக்கப்பட்டால் அவை சரியாகிவிடும்.
வளர்சிதை மாற்ற விளைவுகள்
சில ஆய்வுகள் அஸ்பார்டேம் நுகர்வு மற்றும் வளர்சிதை மாற்ற விளைவுகளுக்கு இடையே உள்ள தொடர்பை பரிந்துரைத்துள்ளன, அதாவது இன்சுலின் பதில் அல்லது குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் போன்றவை. எவ்வாறாயினும், தற்போதுள்ள சான்றுகள் வரையறுக்கப்பட்டவை., மேலும் ஒரு தெளிவான தொடர்பை நிறுவ கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
இதய நோய் அபாயம்
சில ஆய்வுகள் செயற்கை இனிப்புகளின் நுகர்வு இதய நோய், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சில இதய பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயத்துடன் தொடர்புடையவை என்று பரிந்துரைத்துள்ளன.
மனச்சோர்வு அதிகரிக்கும் ஆபத்து
சில ஆய்வுகள் செயற்கை இனிப்புகளின் நுகர்வு மற்றும் மனச்சோர்வு அபாயம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பை எடுத்துக்காட்டுகின்றன. இது மூளை வேதியியல் மற்றும் செரோடோனின் அளவுகளில் ஏற்படும் விளைவுகளால் கருதப்படுகிறது.
எடை அதிகரிப்பு
சர்க்கரை அல்லாத இனிப்புகள் உண்மையில் எடை இழப்புக்கு உதவாது. சர்க்கரைக்கு பதில் யை அஸ்பார்டேமை சேர்ப்பது எடையைக் கட்டுப்படுத்த உதவாது. அஸ்பார்டேம் ஜீரணிக்கப்படும் போது, இது ஃபைனிலாலனைன் என்ற கலவையை உருவாக்குகிறது, இது குடல் அல்கலைன் பாஸ்பேட் (IAP) எனப்படும் நொதியில் குறுக்கிடுவதாகக் காட்டப்பட்டுள்ளது, இது சரியாகச் செயல்படும் போது, உடல் பருமன், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியைத் தடுக்க உதவுகிறது. அஸ்பார்டேம் முறிவு ஃபைனிலாலனைனை உற்பத்தி செய்வதால், அடிக்கடி உட்கொள்ளும் போது எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
எனினும் குறிப்பிடப்பட்ட அபாயங்கள் பொதுவாக உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை முகமைகளால் நிறுவப்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய தினசரி உட்கொள்ளலை விட அதிகமாக உட்கொள்ளும் அளவுகளுடன் தொடர்புடையது என்பது கவனிக்கத்தக்கது. எந்த உணவையும் போல அஸ்பார்டேமையும் மிதமான அளவில் எடுத்துக்கொள்வது முக்கியமானது. உங்களுக்கு குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகள் அல்லது கோளாறுகள் இருந்தால், தனிப்பட்ட ஆலோசனைக்கு ஒரு சுகாதார நிபுணர் அல்லது பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணருடன் கலந்தாலோசிப்பது எப்போதும் நல்லது என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தூக்கமின்மை.. குறைவான நேரம் தூங்குவதால் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்..