2023-ல் அதிகம் தேடப்பட்ட சுற்றுலா தலங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட செய்திகள், நபர்கள், உணவுகள், படங்கள் பட்டியலை கூகுள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலா தலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2023-ல் அதிகம் தேடப்பட்ட சுற்றுலா தலங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
வியட்நாம்
தனது வளமான வரலாறு, துடிப்பான கலாச்சாரம் மற்றும் ரம்மியமான இயற்கை நிலப்பரப்புகளுடன், இந்த பட்டியலில் முதல் வியட்நாம் இடத்தைப் பிடித்தது. இங்குள்ள உணவுகள் மற்றும் உணவு ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. ஹனோயின் பரபரப்பான தெருக்கள் முதல் ஹோய் ஆனின் வரலாற்று வசீகரம் வரை பல்வேறு அனுபவங்களை வியட்நாம் வழங்குகிறது. இங்கு ஏப்ரல் முதல் நவம்பர் வரை சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்கின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கோவா
இந்த பட்டியலில் 2-வது இடத்தில் இருப்பது கோவா..வசீகரமான கடற்கரை, துடிப்பான கலாச்சாரம் மற்றும் அமைதியான சூழ்நிலைக்கு பெயர் பெற்ற கோவாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
பாலி
இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இருப்பது பாலி, இந்தோனேசியாவின் மையத்தில் அமைந்துள்ள ஒரு தீவு நகரமான பாலி வளமான கலாச்சார செழுமை எழில் கொஞ்சும் இயற்கை அழகின் காரணமாக உலகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. ஆன்மீக புத்துணர்ச்சியை நாடினாலும் அல்லது மெய்சிலிர்க்க வைக்கும் நீர் விளையாட்டுகளாக இருந்தாலும் பல மகிழ்ச்சியான அனுபவங்களை பாலி வழங்குகிறது.
இலங்கை
இந்தப் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. பழங்கால கட்டிட இடிபாடுகள் மற்றும் புனிதமான கோவில்கள் முதல் அழகிய கடற்கரைகள் மற்றும் பசுமையான தேயிலை தோட்டங்கள் வரை பல பயண அனுபவங்களை இலங்கை வழங்குகிறது. இதனால் இலங்கைக்கு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கிறது.
தாய்லாந்து
தாய்லாந்து இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. பாங்காக்கின் பரபரப்பான சந்தைகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட கோயில்கள் முதல் ஃபூகெட் மற்றும் கோ ஃபை ஃபை போன்ற வெப்பமண்டல தீவுகளின் அமைதியான அழகு வரை, கலாச்சார பின்னணி மற்றும் இயற்கை அதிசயங்களின் மயக்கும் கலவையை தாய்லாந்தில் அனுபவிக்கலாம்.
காஷ்மீர்
இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள காஷ்மீர், 6-வது இடத்தில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலை, வரலாற்று தோட்டங்கள் மற்றும் விருந்தோம்பும் உள்ளூர்வாசிகளுடன், காஷ்மீர் ஒவ்வொரு பயணிக்கும் இயற்கை அதிசயங்கள் மற்றும் கலாச்சார பொக்கிஷங்களின் மயக்கும் கலவையை வழங்குகிறது. இதன் சுற்றுலா பயணிகளின் ஃபேவரைட் இடமாக காஷ்மீர் உள்ளது.
மாங்காய் ஊறுகாய் முதல் திருவாதிரை களி வரை.. இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 Recipes லிஸ்ட்..
கூர்க்
கர்நாடகாவில் பனி மூடிய மலைப்பகுதியான கூர்க் இந்த பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்தது. 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படும் கூர்க், அதன் பசுமையான காபி தோட்டங்கள், அருவிகள் மற்றும் மரகத-பச்சை நிலப்பரப்புகளால் பயணிகளை கவர்கிறது.
அந்தமான் நிகோபார் தீவுகள்
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகள், இந்தப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. டர்க்கைஸ் நீர் வெள்ளை மணல் கடற்கரைகளை சந்திக்கும் இடத்தில், அழகிய சொர்க்கமாக கருதப்படும் இந்த தீவுகள் தனது இயற்கை அழகு மற்றும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு பெயர் பெற்றது.
இத்தாலி
இந்த பட்டியலில் இத்தாலி 9-வது இடத்தில் உள்ளது. ஐரோப்பாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள இத்தாலி ஒவ்வொரு பயணியின் கனவாகும் அதன் வளமான பண்டைய வரலாறு முதல் சுவையான உணவு வகைகள் வரை பல அம்சங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.
சுவிட்சர்லாந்து
இந்த பட்டியலில் 10வது இடத்தில் இருப்பது சுவிட்சர்லாந்து. ஆல்பைன் அழகு, தெள்ள-தெளிவான ஏரிகள் மற்றும் வசீகரமான கிராமங்கள் கொண்ட நாடு, பாரம்பரியத்தை நவீனத்துவத்துடன் எளிதாக இணைக்கிறது. இதனால் இங்கு அதிகமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்