உலக மக்கள் தொகை மதிப்பீட்டின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிகம் பயணித்த டாப் 5 இடங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
உலக மக்கள் தொகை மதிப்பீட்டின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிகம் பயணித்த டாப் 5 இடங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது மகிழ்ச்சிகரமாகவும் மறக்கமுடியாததாகவும் இருக்கும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். ஆனால் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து மக்கள் சுற்றுலா செல்வதை மீண்டும் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் உலக மக்கள் தொகை மதிப்பீட்டின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிகம் பயணித்த டாப் 5 இடங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
பிரான்ஸ்:
undefined
உலகின் மிக நவீன நாடுகளில் ஒன்றாக அறியப்படும் பிரான்ஸ், பிரபலமான வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் கூடிய முன்னணி ஐரோப்பிய நாடாகும். பிரான்ஸ் 30 ஆண்டுகளாக மிகவும் பிரபலமான சுற்றுலாவுக்கான இடமாக உள்ளது. ஈஃபில் டவர், உலகத் தரம் வாய்ந்த உணவகங்கள், வெர்சாய்ஸ் அரண்மனை, மியூசி டு லூவ்ரே ஆகியவை இங்கு உள்ளன. 2019 இல் சுமார் 38 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பாவில் அதிகம் பார்வையிடப்பட்ட நகரமாக பாரிஸ் திகழ்கிறது.
இதையும் படிங்க: பல்கலைக்கழகங்களில் படிக்க பெண்களுக்குத் தடை: ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு முரட்டு உத்தரவு
ஸ்பெயின்:
மிகவும் பிரபலமான சுற்றுலா செல்லக்கூடிய இடங்களின் பட்டியலில், ஸ்பெயின் அதன் சுவையான உணவு, ஃபிளமென்கோ இசை மற்றும் நடனம், காளைச் சண்டைகள், கலை, இலக்கியம், கட்டிடக்கலை மற்றும் சியஸ்டா ஆகியவற்றிற்கு பிரபலமானது. ஸ்பெயினில் அதிகம் பார்வையிடப்பட்ட நகரம் பார்சிலோனா, இங்கு ஃபேஷன் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை பார்வையிட சிறந்ததாக இருக்கும். ஸ்பெயினின் மற்ற சில இடங்களில் தெளிவான நீல நிற கடற்கரைகள், ஆண்டு முழுவதும் விடுமுறை போன்ற வாழ்க்கை முறை மற்றும் வரலாற்று சூழல் ஆகியவை இந்த இடத்தில் உள்ளது.
லண்டன்:
லண்டன் உலகின் மிகச் சிறந்த அருங்காட்சியகங்கள் மற்றும் காட்சியகங்களின் தாயகமாக அறியப்படுகிறது. ராயல் பொட்டானிக் கார்டன்ஸ் (கியூ கார்டன்ஸ்) 2021 இல் லண்டனில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும், இங்கு சுமார் 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். பக்கிங்ஹாம் அரண்மனை ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது, இது உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். உலகின் மிகவும் மதிக்கப்படும் முடியாட்சிகளில் ஒன்றின் சின்னமாகவும் இது உள்ளது.
இதையும் படிங்க: எங்க நாட்டுக்கு வாங்க! அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்.. பின்லாந்து அரசு அறிவித்த அதிரடி சலுகைகள் !
சீனா:
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக அறியப்படும் சீனா, பயணிக்க பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகும். மேலும் உலகின் அற்புதமான நினைவுச் சின்னங்களின் புதையல் ஆகும். சீனப் பெருஞ்சுவரில் இருந்து சீன உணவு வகைகள் மற்றும் பாரம்பரிய உடைகள் வரை, ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வளமான வரலாற்றை சீனா கொண்டுள்ளது.
இத்தாலி:
உலகம் முழுவதும் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளில் அதன் அளவுகோலை விட்டுச் சென்ற நாடு இத்தாலி. இத்தாலியின் தலைநகரான ரோம் வாட்டிக்கானின் தாயகம் மற்றும் ஒரு பழங்காலத்தின் அடையாளமாகும். அதன் கவர்ச்சிகரமான கலாச்சாரம், கலைத் தளங்கள் மற்றும் புகழ்பெற்ற உணவு வகைகளுடன், இத்தாலி அதன் சுற்றுலாப் பயணிகளுக்கு வளமான வரலாறு மற்றும் ஈர்ப்புகளை வழங்குகிறது.