கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 5 ஊட்டச்சத்து மிக்க உணவுகள்..!!

By Dinesh TG  |  First Published Oct 4, 2022, 10:34 PM IST

நாள்தோறும் நமக்கு தேவையான ஆளவு ஊட்டச்சத்துகளை உணவின் வாயிலாக சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இது மிகவும் முக்கியம். அப்போது தான் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவுக்கு போதுமான உணவு கிடைக்கும். எனினும் பலருக்கும் எதுபோன்ற உணவை சாப்பிடுவது நல்லது, எதை தவிர்ப்பது போன்ற சந்தேகங்கள் இருக்கும். நீங்கள் எடுக்கும் ஊட்டச்சத்து உணவுகளில் குறைபாடு இருக்குமானால், அது சிசுவின் வளர்ச்சியை பாதிக்கும். இதனால் குழந்தைகள் எடை குறைந்து ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறக்கும். அப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைந்தளவு தான் இருக்கும். பிறக்கும் போது குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய் பாதிப்புகள் இருக்க வாய்ப்பு அதிகம். அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகளை வரிசையாக பார்க்கலாம்.
 


இரும்புச் சத்து

வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு பிராணவாயுவை கொண்டுச் சேர்க்க இரும்புச்சத்து மிகவும் முக்கியமானது. அதற்கு சிகப்பு இறைச்சி வகைகள், பட்டாணி மற்றும் காய்ந்த பட்டாணி வகைகளை அதிகம் சாப்பிடலாம். இதில் ஒருநாட்களுக்கு தேவையான போதுமான இரும்புச் சத்துக்கள் உள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்  பிரசவகாலத்தில் குறைந்தது 100 நாட்களாவது 100 மி.கி அளவு இரும்புச்சத்தும், 500 மி.கி ஃபோலிக் அமிலமும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

சுண்ணாம்புச் சத்து

சிசுவுக்கு எலும்புகள் உறுதியாக வளரவும், பற்கள் உறுதியுடன் காணப்படுவது சுண்ணாம்புச் சத்து அவசியமாகும். இது பாலாடை கட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மத்தி மீன்களில் அதிகள் உள்ளன. தினசரி கர்ப்பிணி பெண்கள் 1000 மி.கிராம் வரை சுண்ணாம்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மையை தரும். இதுதவிர, கர்ப்பிணி பெண்களின் உடல்நிலை பொறுத்து கால்ஷியம் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கச் செய்வதும் உண்டு. அதை தவறாமல் எடுத்துக்கொண்டு வரவேண்டும்.

வைட்டமின் பி6

உடலில் சேரும் கொழுப்பு, புரதம் மற்றும் மாவுச்சத்துகளை நமது உடல் சீராக பயன்படுத்துவதற்கு வைட்டமின் பி6 முக்கிய பங்காற்றுகிறது. இதை பன்றி இறைச்சி, பறவை இறைச்சி, மீன், முட்டை, காய்கறிகள், வாழைப்பழம், தானிய வகைகள் மூலம் பெறலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நாளொன்றுக்கு 1.9 மி.கி அளவு வைட்டமின் பி6 ஊட்டச்சத்து தேவை. முடிந்தவரை உங்களுடைய தினசரி உணவில் அதிகளவில் வைட்டமின் பி6 உணவுகளை சேர்த்துக் கொள்வது கர்ப்பிணி பெண்களுக்கும் மற்றும் வயிற்றில் இருக்கும் சிசுக்கும் நன்மை சேர்க்கும்.

பாகற்காயின் டீ போட்டு குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா..??

புரதம்

சிசுசின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது புரதச்சத்து . குழந்தைகள் திசுக்கள் மற்றும் மூளை வளர்ச்சி சரியான முறையில் வளர்ச்சி அடைய புரதச்சத்து அவசியமானது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பப்பை திசுக்கள் மற்றும் மார்பகங்கள் வளர உதவுவதோடு உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதையும் புரதச் சத்து உறுதி செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் நாளொன்றுக்கு 60-100 கிராம் புரதச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீன், இறைச்சி, பறவை இறைச்சி, பீன்ஸ், சீஸ், டோஃபு, பால், கொட்டை மற்றும் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது.

பி காம்ப்ளெக்ஸ் மாத்திரைக்கும் கட்டுப்படாத வாய் புண்- என்ன செய்யலாம்?

ஃபோலேட் வைட்டமின்

வயிற்றில் இருக்கும் குழந்தையின் உடல் புரதம் மற்றும் ரத்தம் தயாரிக்க இச்சத்து தேவை. மேலும், குழந்தைக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகளை ஏற்படுவதை தவிர்க்கவும் இது உதவுகிறதும. கீரை வகைகள், கமலா வகை ஆரஞ்சுகள், பருப்பு வகைகள், பட்டாணி, பீன்ஸ் ஆகியவற்றில் ஃபோலேட் வைட்டமின் அதிகம் காணப்படும். பிரசவகாலத்தின் முதல் 12 வாரங்களில் 200 மி.கி ஃபோலேட் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் குழந்தைக்கு நரம்புமண்டலக் குறைபாடுகளை எதுவும் நேராது. நாளோன்றுக்கு 600 மி.கி எடுத்துக்கொண்டால் குழந்தை பிறப்பு சந்தோஷமாக அமையும்.

click me!