புதிதாக திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதிகள் 3 நாட்களுக்குபாத்ரூம் மற்றும் டாய்லெட் எதுவும் போகக் கூடாது என்கிற விநோதமான கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் கிராமம் குறித்து இங்கே பார்க்கலாம்.
தெற்கு ஆசியாவின் பல்வேறு பகுதி மக்களின் விநோத சடங்கு முறைகள், மேற்கு உலக நாடுகளை ஆச்சரியம் அடையச் செய்து வருகின்றன. இந்தியாவில் பெற்றோரால் பார்த்து திருமணம் முடித்துவைப்பது, அவர்களை ஆச்சரியமடையச் செய்கிறது. காதல் திருமணம், அதனால் ஏற்படும் குடும்ப வன்முறை, சாதிக் கலவரம் உள்ளிட்டவையும் மேற்கு உலக நாடுகளை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையச் செய்கிறது. அந்த வரிசையில் தெற்கு ஆசியாவின் மற்றொரு நாடான இந்தோனேஷியாவில் குறிப்பிட்ட இன மக்களின் பண்பாட்டு சார்ந்த நடைமுறை பலரையும் கவனமீர்த்துள்ளது.
இந்தோனேஷியாவில் பழங்குடி மக்கள் பல்வேறு இனக்குழுக்களாக வாழங்கு வருகின்றனர். அந்நாட்டுக்கும் மலேசியாவுக்கும் இடையே அமைந்துள்ள இடம் போர்னியா. இது இந்தோனேஷியா நாட்டுக்கு உட்பட்டது. இங்கு வசிக்கும் திடாங் பழங்குடியின சமூகம் பெருமளவில் வசிக்கின்றனர்.
அவர்களுடைய சமூகத்தில் புதியதாக திருமணம் முடிக்கும் தம்பதிகள் 3 நாட்களுக்கு சிறுநீர், மலம் உள்ளிட்டவற்றை கழிக்கக்கூடாது. குறிப்பிட்டு 3 நாட்கள் வரை கழிவறையை அவர்கள் பயன்படுத்தக் கூடாது. இந்த நடைமுறையை மீறினால் அந்த தம்பதியினருக்கு பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும்.
இனிமேல் தலைக்கு குளிக்க ஷாம்பூ வேண்டாம்- இது இருந்தால் போதும்...!!
இந்த கட்டளையை மீறுபவர்களுக்கு திருமண முறிவு, துணைக்கு துரோகம் செய்தல், இளம் வயதில் குழந்தைகள் உயிரிழப்பது போன்ற சோகங்கள் ஏற்படும் என்பது பழங்குடியின மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் குறிப்பிட்ட நாட்கள் வரை இளம் தம்பதியை கண்காணிப்பதற்கு என்று குடும்பத்துக்குள் பலரும் நியமிக்கப்படுவார்கள்.
திருமணம் முடிந்து 3 நாட்களும் குறைந்த அளவிலான உணவும், நீரும் கொடுக்கப்படும். அந்த 3 நாட்களுக்கு பிறகு அந்த தம்பதியை குளிக்க வைத்து, கழிவறையை பயன்படுத்த அனுமதி தருவார்கள். ஒவ்வொரு திருமண நிகழ்ச்சியின் போதும், இந்த விநோத நடைமுறையை தம்பதிகள் கடைப்பிடித்து வருகின்றனர்.
முத்தம் தருவதிலும் பெறுவதிலும் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?? இது தெரியாம போச்சே..!!
இந்த சவாலை சந்தித்து அதில் வெற்றி பெறும் தம்பதி தங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றிக்கரமான நீடித்து இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதை மீறினால், திருமண வாழ்வு துரதிருஷ்டமாகும் என்று பழங்குடியின மக்கள் நம்புகின்றனர். குறிப்பிட்ட இனத்தில் பலரும் படித்து நல்ல வேளை மற்றும் ஊதியத்தில் உள்ளனர். ஆனால் இன்றைய காலகட்டத்திலும் இந்த வினோத சடங்கை அவர்கள் கடைப்பிடித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.