துர்நாற்றம் வீசும் இடங்களுக்குச் சென்றால் எச்சில் விழுங்கலாமா? கூடுதா?

By Dinesh TGFirst Published Oct 3, 2022, 5:03 PM IST
Highlights

நாட்டில் ஒரு பக்கம் வளர்ச்சி படு வேகமாக நடந்துகொண்டுள்ளது. அதேசமயத்தில் மக்கள் தொகையும் விரைவாக கூடி வருகிறது. இதனால் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் குப்பைகள், அசுத்தமான இடங்கள் உருவாவது அதிகரித்து காணப்படுகிறது. 
 

நாட்டில் ஒரு பக்கம் வளர்ச்சி படு வேகமாக நடந்துகொண்டுள்ளது. அதேசமயத்தில் மக்கள் தொகையும் விரைவாக கூடி வருகிறது. இதனால் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் குப்பைகள், அசுத்தமான இடங்கள் உருவாவது அதிகரித்து காணப்படுகிறது. 

இதை வளர்ச்சியின் அடையாளம் என்று கூறுவதா? அல்லது சமூகத்தின் கட்டமைப்பு என்று சொலதா? என்று தெரியவில்லை. அரசு கட்டிடங்கள், அலுவலகங்கள், சந்தைகள், பள்ளிக் கூடங்கள், ரயில் நிலையங்கள் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் இந்த நிலைமை தான் நீடிக்கிறது. 

இது மக்கள் பலருக்கும் பிரச்னையை அளிப்பதாக உள்ளது. அசுத்தமான பகுதிகளை கடக்கும் போதும் அதனுடன் தினசரி நாட்களை கழிக்க வேண்டும் என்கிற போதும் அவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாக நேரிடுகிறது. குறிப்பாக அசுத்தமான மற்றும் துர்நாற்றம் வீசும் இடங்களை கடக்கும் போது பலரும் முக்கை பொத்திக்கொண்டு செல்வார்கள். இதற்கு காரணம் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படலாம் என்பது தான். ஆனால் பலரும் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது, எச்சில் கூட விழுங்கமாட்டார்கள். அதற்கும் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

எந்தவிதமான பொது இடங்களிலும் எச்சில் துப்புவது என்பது தவறான பழக்கவழக்கமாகும். சிலர் எங்கு சென்றாலும் எச்சில் துப்பிக்கொண்டே செல்வார்கள், அவர்கள் மிழுங்க மாட்டார்கள். அதேபோல புகைப்பிடிக்கும் போது எச்சில் துப்பிக் கொண்டே புகைப்பிடிப்பார்கள். அதுவும் ஏன் செய்கிறார்கள் என்று தெரியாது. பேருந்தின் சாளரம் அருகே உட்காரும் போது, எங்கெல்லாம் பேருந்து நிற்கிறதோ அங்கு எச்சில் துப்புவார்கள். நம்மில் பலர் துர்நாற்றம் அல்லது அசுத்தமான இடங்களை கடக்கும் போது எச்சில் துப்புவோம். இது யாரையோ பார்த்து வரக்கூடிய பழக்க வழக்கம் தான்.

எப்போதும் குப்புற படுத்து கிடப்பவரா நீங்கள்..? இதப்படிச்ச இனி அப்படி செய்யமாட்டீங்க..!!

குறிப்பிட்ட இடங்களை கடந்துபோகும் போது, தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் மூக்கை பொத்துவது இயல்பானது தான். சுகாதாரமான பழக்கமும் கூட. அந்த காற்றை சுவாசிப்பதால் அலர்ஜியோ அல்லது இருமல் போன்ற பிரச்னை வந்துவிடுமோ என்று எச்சில் விழுங்காமல் இருப்பது தேவையற்ற பயம். நீங்கள் வசிக்கும் பகுதிகளில் துர்நாற்றம் வீசக்கூடிய இடங்கள் அல்லது அசுத்தமான பகுதிகள் அதிகமாக இருந்தால், முகக்கவசத்துடன் வெளியே வருவது நல்லது.

பாகற்காயின் டீ போட்டு குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா..??

ஒருவேளை உங்களுக்கு துர்நாற்றம் அல்லது அசுத்தமான இடங்களை காணும்போதோ அல்லது சுவாசிக்கும் போதோ எச்சில் துப்பக்கூடிய பழக்கம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். பாக்கு உள்ளிட்ட தவறான பழக்கவழக்கங்களால் எச்சில் துப்பும் பழக்கம் இருந்தாலும் அதை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். எந்தவிதமான தவறான பழக்க வழக்கமிருந்தாலும், மாற்றத்தை உங்களிடம் இருந்து துவங்குங்கள். 

click me!