எப்போதும் குப்புற படுத்து கிடப்பவரா நீங்கள்..? இதப்படிச்ச இனி அப்படி செய்யமாட்டீங்க..!!

By Dinesh TG  |  First Published Oct 2, 2022, 12:00 PM IST

நமது வாழ்க்கையில் உறக்கம் இன்றியமையாத ஒன்றாகும். சொகுசாக தூங்க வேண்டும் என்கிற நோக்கில் பலரும் எப்படி வேண்டுமானாலும் படுத்துக் கொள்வார்கள். ஆனால் படுத்திருக்கும் பொசிஷன் உண்மையிலேயே பாதுகாப்பானதா என்பது குறித்து பலரும் அறிந்திருப்பதில்லை. ஒருநாள் முழுக்க அதீதமாக வேலை செய்துவிட்டு, களைப்புடன் படுக்கையில் படுத்திருக்கும் போது போனை பார்த்துக் கொண்டே அயர்ச்சி அடைந்ததும் தூங்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. அப்படி பலரும்  வயிற்று பகுதியின் மீது படுப்பதாகவே உள்ளனர். அதாவது குப்புற படுத்து உறங்குவது பலருடைய வழக்கமாக உள்ளது. சுகமான படுக்கை, மெத் மெத் என்று இருக்கும் தலையனையுடன் படுத்து தூங்குவது நல்ல உறக்கத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் படுக்கையில் படுத்தாலும் தரைமீது படுத்தாலும் குப்புற கவிழ்ந்து படுப்பது உடலுக்கு அவ்வளவு நல்லது கிடையாது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
 


கழுத்துப் பிரச்னை உருவாகிறது

குப்புற கவிழ்ந்து படுக்கும் போது, நமது தலை  தலையணைக்குள் புதைந்துவிடும். அதனால் நாம் தலையை மட்டும் வலது அல்லது இடதுப் பக்கம் திருப்பி படுப்போம். இப்படி நீண்ட நேரம் படுத்திருந்தால், கழுத்துப் பகுதியில் எலும்பு திரும்பியே இருக்கும். இதனால் கழுத்து வலி மற்றும் முதுகெலும்பு சம்மந்தப்பட்ட சில மோசமான பிரச்னைகளும் ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக இப்படி தூங்குபவர்களுக்கு ஹெர்னியேடட் டிஸ்க் என்கிற பிரச்னை வரும். 

Tap to resize

Latest Videos

அழகு குறையத் தொடங்கும்

முழு இரவும் தலைகுப்புற படித்துவிட்டு, காலையில் எழுந்து நீங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்தால் ஒரு மாற்றம் தெரியும். இரவு முழுவதும் தலையணையில் புதைந்துகொண்டு படுத்ததால், தலையணை படிப்பு முகத்தில் தெரியும். நெற்றி படிப்புகளில் பதிந்துவிடும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு முகம் வீக்கமடையும். தொடர்ந்து இப்படி படுத்து தூங்குவதால், மூக்கு மற்றும் நெற்றியின் தோலில் இருக்கும் இழுவை தன்மை மறைந்து சுருக்கங்கள் நிரந்தரமாக தங்கி விடும் வாய்ப்பும் உள்ளது.

முதுகெலும்பில் அழுத்தம் ஏற்படுவது

வயிற்றுப் பகுதியை தரை அல்லது படுக்கையில் கொண்டு படுப்பதால், நமது உடலில் முழு எடையும் வயிற்றுக்கு சென்றுவிடும். இதனால் முதுகெலும்பின் பொசிஷனில் மாறுபாடு ஏற்படுகிறது. அதையடுத்து முதுகெலும்பில் பாரம் அதிகரித்து, அதனால் ஏற்படும் பிரச்னைகள் உடல் முழுவதையும் பாதிக்கச் செய்துவிடும். உடலை சீராக வைத்திருப்பதற்கு முதுகெலும்பில் செயல்பாடு மிகவும் அவசியம். மூளையில் தகவல்களை உடலுக்கு கொண்டு சேர்க்க, முதுகெலும்பிலுள்ள நரம்புகள் பெரிதும் உதவுகின்றன. தலைக்கும் உடலின் மற்ற பகுதிக்கும் இணைப்பு பாலமாக செயல்படுவதே முதுகெலும்பு தான். அதனுடைய ஆரோக்கியம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

உடலில் பசி அதிகமாக எடுப்பது போன்று உணர்வு ஏற்பட 5 காரணங்கள்..!!

மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் குறைகிறது

குப்புற படுப்பதால் நம்முடைய கழுத்தின் பொசிஷன் மாறிவிடுகிறது. இதனால் மூளைக்கு ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகள், கழுத்துப் பகுதியை அடையும் போது சுருங்கி விடுகிறது. இதனால் மூளைக்கு தமனிகள் வழியாக செல்லும் ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் குறைந்தளவில் மட்டுமே சென்றடைகிறது. குறிப்பாக கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தத் தமனிகளில் அடைப்புக் கொண்ட நபர்கள் இப்படி படுக்கவே கூடாது. தொடர்ந்து அப்படி படுத்தால், மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் முற்றிலும் தடைபட்டு மரணிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

கருவுறுதலுக்கு அருமருந்து; ஆண்மைக்கு பலம் சேர்க்கும் அற்புதம்- அது இதுதான்..!!

குப்புற தூங்குவது மட்டுமில்லை, இதுவும் ஆபத்து தான்

தூங்குபோது மட்டுமில்லாமல், குப்புற படுத்துக் கொண்டே வேலை செய்வது, புத்தகம் படிப்பது, செல்போனில் வீடியோ பார்ப்பது உள்ளிட்டவர்களுக்கும் இதே பிரச்னைகள் ஏற்படக்கூடும். தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்யும் சூழல் உருவாகியுள்ள நிலையில், பலரும் குப்புற படுத்துக் கொண்டு பணிகளை மேற்கொள்வதை காண முடிகிறது. நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கையை விரும்புபவர்கள், இனிமேல் தேவையில்லாமல் குப்புற கவிழ்ந்து படுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 

click me!