திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க என்ன பண்ணனும்? அதை மட்டும் செய்யக்கூடாது - Experts சொல்லும் உண்மை!

Published : Oct 21, 2023, 11:08 PM ISTUpdated : Oct 21, 2023, 11:10 PM IST
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க என்ன பண்ணனும்? அதை மட்டும் செய்யக்கூடாது - Experts சொல்லும் உண்மை!

சுருக்கம்

ஒவ்வொருவரும் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றி நிறைய அழகிய கனவு காண்கிறார்கள், அந்த கனவுகளை நனவாக்கவும் விரும்புகிறார்கள். ஆனால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய, சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள், அது என்னவென்று பார்ப்போம்.

திருமணத்திற்கு முன் ஒவ்வொருவருக்கும் தங்கள் மனைவி இப்படி இருப்பாரா? அல்லது கணவன் இப்படி இருப்பாரா? என்ற சில எதிர்பார்ப்புகள் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் மத்தியில் இருக்கும். புதிதாக திருமணமானவர்கள் ஒருவரையொருவர் பற்றிய சுவாரசியமான விஷயங்களைக் கற்றுக்கொள்வதால், அவர்களது காதல் அதிகரிக்கிறது மற்றும் அவர்களது உறவு வளர்கிறது.

என்ன இருக்க கூடாது?

எதிர்பார்ப்பு.. ஆம் எதிர்பார்ப்பு என்ற ஒரு சொல்லுக்குள் பல அர்த்தங்கள் ஒளிந்திருக்கிறது, அவரவரை அவரவர்களாக ஏற்றுக்கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். அதற்கு எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் இல்லாததே மிகவும் நல்லது. 

கன்னி ராசி பெண்களுக்கு அழகான பையன் கணவனாக அமையும்.. அப்போ உங்கள் ராசிக்கு என்ன?

திருமணம் ஆனா உடனே, எல்லாமே சற்று புதுமையாக இருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல சில மாற்றங்கள் நிகழ துவங்கும். திருமணத்திற்குப் பிறகு நமக்குள் இருக்கும் பந்தம் வேறு, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நம் வாழ்க்கை துணை நம்மோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அது நடக்காமல் போகலாம். 

அப்போதுதான் பிறர் மீது நமக்கு கோபம் வர துவங்குகிறது, அவர்கள் நாம் எதிர்பார்த்தபடி இல்லை என்றால் நாம் மிகவும் ஏமாற்றமடைகிறோம். அப்போதுதான் நாம் உறவில் பலவீனமடைகிறோம், இருவருக்கும் இடையே உள்ள தூரம் அதிகரித்து உறவு முறிகிறது. இதற்கெல்லாம் காரணம் எதிர்பார்ப்புகள் மட்டுமே என்கிறார்கள் நிபுணர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

அதிக எதிர்பார்ப்புகளால், இது யதார்த்தத்துடன் ஒத்துப்போகாததால், பல உறவுகளை உடைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. யாராவது எனக்காக ஏதாவது செய்வார்கள் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் அது நடக்காதபோது மிகுந்த ஏமாற்றம் அடைகிறார்கள். திருமணம் என்ற உறவின் மீது நிறைய நம்பிக்கைகளை வைத்து கடைசியில் விவாகரத்துக்கு போய் நிற்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு எதிர்பாராததை ஏற்றுக்கொள்வதுதான். 

பெண்களிடம் உள்ள இந்த குணங்கள் தான் ஆண்களை அதிகமாக ஈர்க்கிறதாம்.. என்னென்ன தெரியுமா?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்