நல்ல உடலுறவு.. ஆனால் அதற்கு பிறகு வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலி இருக்கா?.. அதற்கு காரணம் இது தான்!

By Asianet Tamil  |  First Published Oct 20, 2023, 11:07 PM IST

உடலுறவு கொண்ட பிறகு பலருக்கு வயிற்றுப் பிடிப்பு ஏற்படுகிறது, ஆனால் இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பல நேரங்களில் நடக்கும். சரி இது ஏன் நடக்கிறது? ஏன் என்று எப்போதாவது யோசித்ததுண்டா? அது குறித்து இந்த பதிவில் காணலாம்.


உடலுறவின் போது வலி

உடலுறவுக்குப் பிறகு பலர் வயிற்றுப் பிடிப்பு அல்லது வலியை அனுபவிக்கிறார்கள். இது உங்களுக்கு எப்போதாவது நடந்திருக்கிறதா? இந்த பிரச்சனை பலருக்கும் வரும்.. அதனால் பதற வேண்டாம்.. ஆனால் இது சிறிய பிரச்சனைகள் மட்டுமின்றி பெரிய அளவிலும் சில நேரங்களில் பிரச்சனைகளையும் உண்டாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும் இந்த பிரச்சனை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உள்ளது. இதற்கான காரணங்களை இப்போது தெரிந்து கொள்வோம்..

Tap to resize

Latest Videos

உடலுறவின் போது அல்லது அதற்குப் பிறகு வயிற்றுப் பிடிப்பு ஏற்படுவதற்கு விந்து வெளியேறுதல் ஒரு பொதுவான காரணமாகும். உடலுறவுக்குப் பிறகு அடிவயிற்றில் வலியை அனுபவிப்பவர்கள் பலர் உள்ளனர். ஏனெனில் உடலுறவின் போது இடுப்பு மற்றும் கட்ஃபிளோரஸ் தசைகள் வேகமாக சுருங்கும். இதனால் வயிற்று வலி ஏற்படுகிறது.

திருமண உறவில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல்.. தம்பதிகளே இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க..

தசை அழுத்தம்

உடற்பயிற்சியைப் போலவே, உடலுறவின் போது இடுப்பு அல்லது வயிற்று தசைகள் கஷ்டப்படுகின்றன. இது உடலுறவின் போது அல்லது அதற்குப் பிறகு நீங்கள் தசைப்பிடிப்பு உணரலாம். இறுக்கமான தசைகள், நீரிழப்பு, நாள்பட்ட அசாதாரண தசை நிலை ஆகியவை வயிற்று வலியை ஏற்படுத்தும். ஆனால் இதனால் ஏற்படும் வலி சில நிமிடங்களில் குறைந்துவிடும்.

சிறுநீர் பிரச்சினைகள்

உங்களுக்கு சிறுநீர்ப்பை அல்லது சிறுநீர் அமைப்பு தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், உடலுறவுக்குப் பிறகு வலியை உணருவீர்கள். உங்களுக்கு ஏற்கனவே சிறுநீர்ப்பை தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடலுறவின் போது அது மோசமாகிவிடும். இருவரில் யாருக்காவது சிறுநீர் பாதையில் தொற்று இருந்தால், வயிற்று வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

நீண்ட நேர உடலுறவு 

உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபடுவதும் வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலியை ஏற்படுத்தும். வயிற்றுப் பிடிப்பு மற்றும் எரிச்சல், குறிப்பாக கருப்பையில் வலி ஏற்படும். இது கருப்பையில் தொற்று மற்றும் காயம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

சுகர் நொடியில் குறைய இந்த 6 சிம்பிள் தந்திரங்கள் பலன் தரும்..!!

click me!