ஒரு ஆணுறையை எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் தெரியுமா? இதற்கும் லிமிட் இருக்கா? ஆம் - முழு விவரம்!

By Asianet Tamil  |  First Published Oct 20, 2023, 11:57 PM IST

பாலியல் ரீதியான நோய்களை கட்டுப்படுத்தவும், பேறுகாலத்தை தள்ளிப்போடவும் உதவுவது தான் ஆணுறைகள். இந்த ஆணுறை பயன்பாட்டை பற்றி அரசும், இன்னும் பல நிறுவனங்களும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 


ஆனால் இந்த ஆணுறை குறித்த பல விஷயங்கள் குறித்து பலரும் அறிந்துகொள்வதில்லை, ஆகவே இந்த பதிவின் மூலம் நாம் ஆணுறைகள், மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைக்குறித்து அறிந்துகொள்ளலாம். சரி ஒரு ஆணுறையை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

ஆணுறை பாக்கெட் சேதமாகியுள்ளதா?

Tap to resize

Latest Videos

undefined

ஆணுறைகள் எளிதில் சேதமடையகூடியவை, ஆகவே நீங்கள் வாங்கும் ஆணுறை பாக்கெட்கள் சரியாக உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். ஆணுறைகள் நெகிழும் தன்மை கொண்டவை ஆகவே, நேரடியான சூரிய ஒளியில் அதை வைக்காமல் பாதுகாப்பது நல்லது. 

சுகர் நொடியில் குறைய இந்த 6 சிம்பிள் தந்திரங்கள் பலன் தரும்..!!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டும். 

அனைத்து ஆணுறைகளும் ரேப்பரில் காலாவதி தேதி அச்சிடப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் வாங்கு ஆணுறை தேதி கடந்துவிட்டால், அந்த ஆணுறையை பயன்படுத்துவது நல்லதல்ல மற்றும் அது உரிய பாதுகாப்பை வழங்காது. 

ஆணுறை கவரை பிரிக்கும்போது கவனம் தேவை 

முன்பே கூறியதை போல ஆணுறைகள் மிகவும் நெகிழும் தன்மை கொண்டவை, கூர்மையான விஷயங்கள் அதன் மேலே பட்டதால் அது கிழிந்து விடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே அதை பிரிக்கும்போது பொறுமையாக பிரிக்கவேண்டும். 

சரி ஒரு ஆணுறையை எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்?

நீண்ட நேர உடலுறவின்போது ஒரு ஆணுறையை 30 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்த கூடாது என்கிறார்க; நிபுணர்கள். அப்படி அதற்கு அதிகமான நேரம் ஒரே ஆணுறையை பயன்படுத்தினால் நிச்சயம் அது, உரிய பலனை தராது என்கிறார்கள் நிபுணர்கள்.

நல்ல உடலுறவு.. ஆனால் அதற்கு பிறகு வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலி இருக்கா?.. அதற்கு காரணம் இது தான்!

click me!