பூரான் தொல்லையா? அதை ஈசியா விரட்ட இந்த 5 டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்!

By Kalai Selvi  |  First Published Sep 2, 2024, 11:43 AM IST

Tips To Remove Centipedes : மழைக்காலத்தில் பூரான் தொல்லை அதிகமாக இருக்கும். எனவே, உங்க வீட்டு பாத்ரூமில் பூரான் வருவதை தடுக்க சில குறிப்புகள் இங்கே.


பொதுவாகவே, மழைக்காலங்களில் வீட்டில் பூச்சிகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக, குளியலறையில் அடிக்கடி பூரான் வரும். பூரான் காதுக்குள் நுழைந்தால் பெரும் பிரச்சனையாகிவிடும். மேலும் அதை வீட்டில் இருந்து விரட்டுவதும் சவாலான காரியம். அந்த வகையில், உங்கள் பாத்ரூமில் பூரான் நுழைவதை தடுக்க ஒவ்வொரு முயற்சியும் அது தோல்வியில் முடிந்து விட்டதா? உங்களுக்காக இந்த கட்டுரையில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால் இனி பூரான் உங்க வீட்டு குளியலறைக்கு ஒருபோதும் வரவே வராது.

பாத்ரூமில் பூரான் வருவதை தடுக்க சில டிப்ஸ் :

Tap to resize

Latest Videos

1. பாத்ரூமை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் :

பொதுவாகவே பூரான் பாத்ரூம் வழியாக தான் வீட்டிற்குள் நுழையும். குறிப்பாக, இது சுகாதாரம் இல்லாத இடத்தில் தான் வரும். எனவே, நீங்கள் உங்கள் பாத்ரூமை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் குறிப்பாக, நீங்கள் குளித்த பிறகு அவற்றை நன்கு சுத்தம் செய்யுங்கள். மேலும், பாத்ரூம் எப்போதும் உலர்ந்து இருக்க வேண்டும் இப்படி உங்கள் பாத்ரூமை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொண்டால் பூரான் ஒருபோதும் வராது.

இதையும் படிங்க:  என்ன வீட்டிற்கு வந்த பூரானை கொல்லக் கூடாதா..? ஏன் அப்படி தெரியுமா..?

2. வினிகர் மற்றும் டெட்டால் :

குளியலறையில் பூரான் வராமல் தடுக்க தண்ணீரில் வினிகர் மற்றும் டெட்டால் கலந்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் பூச்சி அதை பூரான் வரும் இடத்தில் தெளிக்கவும். காரணம், இவற்றில் இருந்து வரும் வாசனை பூரானுக்கு பிடிக்காது. இதனால் பூரான் உங்கள் வீட்டு பாத்ரூமுக்கு வரவே வராது. இந்த  வினிகர் மற்றும் டெட்டால் கலந்த நீரை, நீங்கள் வீடுகளில் துடைத்தால் பூரான் மட்டுமல்ல, மழைக்காலத்தில் வரும் பல பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

3. உப்பு வினிகர் மற்றும் டெட்டால் : 

பூரான் உப்பிலிருந்து விலகி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பாத்ரூமில் பூரான் வருவதை தடுக்க தண்ணீரில் உப்பு வெள்ளை வினிகர் மற்றும் டெட்டால் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தினால் பூரான் உங்கள் வீட்டு பாத்ரூமுக்குள் வராது.

இதையும் படிங்க: பூரான் கடிக்கு இவ்வளவு இயற்கை  மருந்துகள் இருக்கு...நீங்கள் தெரிஞ்சுக்கு நண்பருக்கும் பகிருங்கள்...

4. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் :

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் நிரப்பி, அதில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை சேர்த்து, பாத்ரூமின் மூலையில் அல்லது பூரான் வரும் இடத்தில் தொடர்ந்து தெளித்தால் பூரான் ஒருபோதும் வராது.

5. உப்பு : 

பூரான் பெரும்பாலும் இருண்ட மற்றும் ஈரமான இடத்தில் தான் தங்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் வீட்டு பாத்ரூம் ஈரம் இல்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல இரவு தூங்கும் முன் பாத்ரூமில் உப்பு தூவி விடுங்கள். இப்படி செய்தால் பூரான் பாத்ரூமுக்குள் நுழைவதை செல்வமாக தடுக்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!