துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!

Published : Apr 09, 2019, 01:14 PM ISTUpdated : Apr 09, 2019, 01:15 PM IST
துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!

சுருக்கம்

உங்களுடைய வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும் நாளிது. சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். எப்போதும் யாரையும் நம்பி விடாதீர்கள்.

துலாம் முதல் மீனம்  வரை ராசிப்பலன்..! 

துலாம் ராசி நேயர்களே..! 

உங்களுடைய வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும் நாளிது. சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். எப்போதும் யாரையும் நம்பி விடாதீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள் இது. உங்களுடைய பலம் பலவீனம் இரண்டும் உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளும் நாள் இது. சகோதரர் வழியில் நன்மை கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே..!

நீங்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் நல்லதாக முடியும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். உங்கள் நண்பர்களின் ஆலோசனையை ஏற்று அதற்கு ஏற்றவாறு செயல்படுவீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் கற்றுக்கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்த சாதனங்களை வாங்க முற்படுவீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே..! 

நீங்கள் எடுத்த வேலையை முடிக்காமல் தூங்க மாட்டீர்கள். பழைய கடன்கள் தீரும் நாள் இது. தாயாருடன் வாக்குவாதம் வேண்டாம். உங்களுடைய வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும் நாள் இது.

மீன ராசி நேயர்களே..! 

கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருக்கும் நபர்கள் அறிமுகமாகும் நாள் இது. வாகனத்தை சீர் செய்வீர்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்