
மேஷ ராசி நேயர்களே..!
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும் நாள் இது. புதியவர்களின் நட்பால் உற்சாகமாக காணப்படுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடத்திலிருந்து பணவரவு உங்களை வந்து சேரும். செலவை குறைக்க திட்டமிடும் நாள் இது.
ரிஷப ராசி நேயர்களே..!
இதற்கு முன் நடந்த பல சங்கடமான விஷயங்களைப் பற்றி சிந்தித்து பார்க்காதீர்கள். அது பற்றி பேசவும் வேண்டாம். தன் குடும்பத்தினர் தன்னை புரிந்து கொள்ளவில்லையே என கவலைப்பட வேண்டாம். முதலில் உங்களுக்கு வரும் சந்தேகத்தை நிறுத்துங்கள்.
மிதுன ராசி நேயர்களே..!
போராடி வெற்றி பெறும் நாள் இது. பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். திடீர் பயணங்களை மேற்கொள்ள கூடிய நிலைமை ஏற்பட வாய்ப்பு உண்டு.
கடகராசி நேயர்களே...!
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் உங்களை வந்து சேரும்.
சிம்மராசி நேயர்களே...!
இன்று நீங்கள் சொல்லும் வார்த்தையை யாராக இருந்தாலும் செவிகொடுத்து கேட்பார்கள். உங்களை நம்பி பல முக்கிய முடிவுகளை எடுக்கவும் தயங்க மாட்டார்கள்.
கன்னி ராசி நேயர்களே..!
பல நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும் நாள் இது. கடனாக கொடுத்த பணம் உங்களை வந்தடையும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ளும் நாள் இது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.