மசாஜ் சென்டர்களுக்கு ஆப்பு..! உயர்நீதிமன்றம் அதிரடி...!

By ezhil mozhiFirst Published Apr 9, 2019, 12:41 PM IST
Highlights

ஜூன் மாதம் முதல் மசாஜ் சென்டர்கள் உரிமம் பெற்று இயங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜூன் மாதம் முதல் மசாஜ் சென்டர்கள் உரிமம் பெற்று இயங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் இல்லையாங்கி வருகின்றன. மசாஜ் சென்டர் செல்வதை பல கஸ்டமர் பழக்கமாக  கொண்டு உள்ளனர்.

ஒரு சில மசாஜ் சென்டரில், தொழில் ரீதியாக முறையாக நடத்தப்பட்டு வருவதாகவும், ஒரு சில மசாஜ் சென்டரில் அவ்வாறு இல்லாமல் விதிமுறைகளை மீறி சில விஷயங்கள் அரங்கேறி வருவதையும் அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது. இது போன்ற சமயத்தில் காவல் துறை ரெய்டு நடத்தும் போது, முறையாக நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் பல பிரச்சனை சந்தித்து வருவதாகவும், தொழிலில் மந்தம் ஏற்படுவதாகவும் தெரிவித்து இது தொடர்பாக தொடர்புடைய நபர் வழக்கு ஒன்றை தொடுத்தார்.

அந்த வழக்கு மீதான விசாரணை  நேற்று நடைபெற்றது. அப்போது, "ஜூன் மாதம் முதல் மசாஜ் சென்டர்கள் உரிமம் பெற்று இயங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது செயல்பாட்டில் இருந்து வரும் மசாஜ் சென்டர்கள் இது வரை உரிமம் பெறவில்லை என்றால் அடுத்து வரும் ஒரே மாதத்திற்குள் உரிமத்தை பெற விண்ணப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மசாஜ் சென்டர்கள் தொழிலில் காவலர்கள் தலையிட காவல்துறைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் நீதிபதி ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடையாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்து உள்ளது சென்னை உயர் நீதிமன்றம் 

click me!