
துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!
துலாம் ராசி நேயர்களே...!
உங்களுடைய நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாலை முதல் எதிலும் நிதானம் தேவை.
விருச்சக ராசி நேயர்களே...!
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு அதிக மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய மரியாதை உயரும்.
தனுசு ராசி நேயர்களே...!
உங்கள் பிள்ளைகளின் தனித் திறமையைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும். சகோதரர்களால் உங்களுக்கு தேவையான உதவிகள் வந்தடையும்.
மகர ராசி நேயர்களே...!
வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை சாதனங்கள் வாங்க கூடும். பெற்றோர் உடல்நலத்தில் கண்டிப்பாக கவனம் தேவை. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்று செய்ய வேண்டிய சூழல் அமையும்.
கும்ப ராசி நேயர்களே...!
திட்டவட்டமாக செயல்பட்டு சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் நாள் இது. உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வாகன வசதிப் பெருகும். சொத்துப் பிரச்சினைகளும் வந்து தீரும்.
மீனராசி நேயர்களே...!
புதியவர்களின் அறிமுகமாகும் நாள் இது. ஆதாயமும் கிடைக்கும் நாள். இன்று பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொந்த பந்தங்கள் உங்களை தேடி வருவார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.