
கோடை காலம் தொடங்கிய உடன் தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் இயல்பைவிட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.அதன் படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெயில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது வெயிலில் தாக்கம் உணரமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொது மக்கள் வெளியில் எங்கு சென்றாலும் எப்போதும் உடை மற்றும் வாட்டர் பாட்டிலை வைத்து கொள்வது சிறந்தது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.