சென்னை ரயில்வே ஸ்டேஷனுக்கு எம்ஜிஆர் பெயர்..! வெளிவந்த ரகசிய முடுச்சு..!

By ezhil mozhiFirst Published Apr 6, 2019, 6:55 PM IST
Highlights

சென்னை ரயில்வே ஸ்டேஷனுக்கு மறைந்த எம்ஜிஆர் பெயரை வைக்கப்படும் என பிரதமர் மோடி தமிழக வருகையின் போது தெரிவித்திருந்தார்.
 

சென்னை ரயில்வே ஸ்டேஷனுக்கு மறைந்த எம்ஜிஆர் பெயரை வைக்கப்படும் என பிரதமர் மோடி தமிழக வருகையின் போது தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் குறித்தும் மக்கள் பாஜக விற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 5 ஆண்டு சாதனைகளை விளக்கி கடந்த மாதம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் உரையாடினார். அதில் ஒன்றுதான் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு மறைந்த எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்பது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடியே நேரடியாக தலையிட்டு கெஜட்டில் பெயர்  வெளியிட செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தடையில்லா சான்று வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட வேண்டும் என்றால் மாநில கெஜட்டில் வெளியிட வேண்டும் என்பது விதி. இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் தெரிவித்து, தமிழக முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இடம் பேச வைத்துள்ளார்.

இது தொடர்பாக பியூஸ் கோயலும் முதல்வர் பழனிசாமியுடன் பேசி உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். இதன் பிறகுதான் இந்த விஷயம் தமிழக கெஜட்டில் இடம் பெற்று உள்ளது. அதுமட்டுமல்லாமல் சூட்டோடு சூடாக தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடமும் பியூஸ் கோயல் பேசியுள்ளார். அதன் பின்பு தான் எம்ஜிஆர் பெயர் பொருந்திய நியான் விளக்கு எழுத்துக்களை பொருத்துவதற்கு விரைந்து செயல்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு பல சிறப்பு திட்டங்களை அறிவித்து விரைந்து முடிப்பதால் தமிழகத்திலும் பாஜக காலூன்ற தொடங்கி உள்ளது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து உள்ளனர். 

click me!