ஆதிவாசி பெண்ணுக்கு சபாஷ் போடு..! ஓலை குடிசை வீட்டு ஏழை இன்று கலெக்டர்..! இதை எல்லாம் யாரும் பாராட்டவும் மாட்டீங்க... பகிரவும் மாட்டீங்களே..!

By ezhil mozhiFirst Published Apr 6, 2019, 4:51 PM IST
Highlights

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இருந்து ஆதிவாசி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியராக தேர்வாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் ஆதிவாசி இன மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இருந்து ஆதிவாசி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியராக தேர்வாகி உள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் ஆதிவாசி இன மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ளது தொழுவண்ணா பகுதி இந்த பகுதியில் வசித்து வரும் சுரேஷ் - கமலம் தம்பதியினருக்கு மகளான தான்யா ஸ்ரீ(26 ) சிறுவயது முதலே நன்கு படிக்கக் கூடியவர். அவருக்கு எப்படியாவது கலெக்டர் ஆக வேண்டும் என்பது தான் ஆசையே. மிகவும் வறுமையில் வாடி தவித்து வந்துள்ள இந்த குடும்பம் சாதாரண ஓலை வீட்டில் அதுவும் கரையான் பிடித்த வீட்டில் வசித்து வந்துள்ளது. 

இருந்தாலும், வாழ்க்கையில் தான் நினைத்த அந்த உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக பெரு முயற்சியோடு கடினமான சூழ்நிலையிலும் ஒரே நோக்கத்தோடு படித்து வந்துள்ளார். இவருடைய படிப்புக்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுத டெல்லி செல்ல வேண்டும் என்பதால் அதற்கான பணம் கூட இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அக்கம்பக்கத்தினரிடம் பணத்தை பெற்று தான்யா ஸ்ரீ - யை தேர்வு எழுத டெல்லி அனுப்பி உள்ளனர். தேர்வு முடிந்து வீடு திரும்பிய தன்யா ஸ்ரீ வீட்டின் அருகே கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவருடைய இடது கை எலும்பு முடிந்து உள்ளது.

இந்த நிலையில்தான் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது அதில் தனியா ஸ்ரீ 410 ஆவது ரேங்க் பெற்று உள்ளார். இதன்மூலம் வயநாடு பகுதியில் ஆதிவாசி பெண் ஒருவர் முதல் முறையாக மாவட்ட ஆட்சியர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆதிவாசி மக்கள் அவருடைய வெற்றியை கொண்டாடிபெரும் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். தான்யா ஸ்ரீ யின் முயற்சிக்கு பொதுமக்களும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர். 

click me!