நட்பு என்பது மிகவும் புனிதமான பந்தமாக கருதப்படுகிறது, நம்மை சிறந்த மனிதனாக மாற்ற ஒரு நல்ல நண்பன் போதும். ஆனால் அதுவே நம் பக்கத்தில் தவறான நண்பர்கள் இருந்தால், நாம் வாழ்க்கையில் நிறைய இழக்க வேண்டியிருக்கும். அதனால் கெட்ட நடத்தை கொண்ட நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
வாழ்க்கையில் நண்பர்கள் இல்லாமல் யாரும் இல்லை. சிலர் எவ்வளவு வயதானாலும் தங்கள் பால்ய நட்பை மறக்க மாட்டார்கள். நண்பர்களை அடிக்கடி சந்திப்பார்கள், நல்லது கெட்டது என அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் நல்ல நண்பர்களை விட்டுவிடாதீர்கள் என்று பெரியோர்கள் கூறுவார்கள். மகிழ்ச்சியில் மட்டுமின்றி துன்பத்திலும் ஒவ்வொரு நொடியிலும் ஒரு நண்பன் நமக்காக இருக்கிறான் என்பதை நாம் உணரவேண்டும்.
ஆனால் சிலர், நண்பர்களாக இருந்துகொண்டே நமக்கு குழி தோண்டுவார்கள். தீங்கு விளைவிக்கும். கெட்ட காரியங்களைச் செய்கிறார்கள். அதனால் தான் அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். எப்படிப்பட்ட நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போகின்றதா? அது ஒரு வியாதியா? மூன்று முக்கிய காரணங்களை கூறும் டாக்டர்ஸ்!
பொய்யர்
எப்பொழுதும் பொய்களையும், பொய்களை கூறும் நண்பர்களை முடிந்தவரை தூர விலக்க வேண்டும். இந்த வகை நண்பர்கள் தன் தவறுகளை மறைக்க பொய் மேல் பொய் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அல்லது உங்களை விட சிறந்தவராக மாற மட்டுமே முயற்சிப்பார்கள். உங்கள் வளர்ச்சியை பொய் கூறி தடுத்து அவர்கள் வளர மட்டுமே சிந்திப்பார்கள்.
வதந்தி பரப்புபவர்
கிசுகிசு செய்பவர் மற்றவர்களைப் பற்றி பேசவும், வதந்திகளைப் பரப்பவும் விரும்புவார். இந்த வகையான நண்பர்கள் பொதுவாக உங்களை எரிச்சலூட்டுவது மட்டுமல்லாமல், அவர்களின் நடத்தை உங்களை ஆபத்தில் ஆழ்த்த வாய்ப்புள்ளது. எனவே முடிந்தவரை அத்தகைய நபரிடம் இருந்து விலகி இருங்கள்.
எதிர்மறையாளர்
எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பவர்களை சற்று வாழ்க்கையில் தள்ளியே வையுங்கள். காரணம் அப்படிப்பட்டவர்களால் ஒவ்வொரு வேலையும் எதிர்மறையாகவே பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் பிறர் செய்யும் அனைத்தையும் கெட்டதாகவே பார்க்கிறார்கள். உங்களைச் சுற்றி இருக்கும் அத்தகைய நபர்களால், நீங்கள் எந்த வேலையையும் தொடங்க முடியாது. எந்த வேலையிலும் வெற்றி பெற முடியாது. அது உங்களை சோர்வடையச் செய்கிறது. ஆகவே அவர்களிடம் இருந்து விலகி இருங்கள்.
குறைந்த விலையில் அந்தமான் தீவுகளை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் கட்டணம் எவ்வளவு?