உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போகின்றதா? அது ஒரு வியாதியா? மூன்று முக்கிய காரணங்களை கூறும் டாக்டர்ஸ்!
உடலுறவு என்பது வெறும் ஒரு மகிழ்ச்சிக்கான செயல் அல்ல. இதில் பல நன்மைகள் உள்ளன. உடலுறவு இல்லாத திருமணம், சில இழப்புகளுக்கு வழிவகுக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆனால் இது தெரிந்தாலும் சிலரால் சீராக உடலுறவுகொள்ள முடிவதில்லை.. ஏன் தெரியுமா?
தங்கள் துணையுடன் உடல் உறவில் ஈடுபடவில்லை என்றால், அது ஏதோ ஒரு நோயின் அறிகுறி அல்ல. மாறாக வாழ்வதற்கு உடலுறவு முக்கியம் என்று அவர்கள் நினைக்காததே இதற்குக் காரணம். ஆனால் உடலுறவுகொள்ளும்போது மகிழ்ச்சியான ஹார்மோன்கள் வெளியாகும். டோபமைன் அவற்றில் ஒன்று. உங்கள் உடலில் டோபமைன் வெளியிடப்பட்டதும், மனமும் உடலும் அமைதியாகிவிடும்.
ஆகவே உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க, வாழ்க்கை சுறுசுறுப்பாக இருக்க உடலுறவு என்பது அவசியமான ஒன்று. உறவில் இருந்து விலகி இருக்கும் தம்பதிகளிடையே பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கும். மன அழுத்தத்தால் இருவரும் பிரிந்து செல்கிறார்கள். சரி உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போக என்ன காரணம்?
இந்த தவறுகளை மட்டும் தவிர்த்தால் அதுதான் பெஸ்ட் Parenting.. பெற்றோர்களே ப்ளீஸ் நோட்...
பிறப்புறுப்பு வறட்சி
பெண்களுக்கு வயதாக ஆக, பிறப்புறுப்பு வறட்சி பிரச்சனை அதிகரிக்கிறது. பிறப்புறுப்பு வலி மற்றும் வறட்சி காரணமாக சில பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதில்லை. வழக்கமான உடலுறவுகொள்ளும் ஒரு பெண் தன் லிபிடோவை (உணர்ச்சி) இழக்கமாட்டார். பிறப்புறுப்பு வறட்சி அவருக்கு ஏற்படுவது மிகவும் அரிது.
இணைப்புச் சிக்கல்
இரு மனங்கள் ஒன்றுபட்டால்தான் உடலும் ஒன்றுபடும், திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில், தம்பதியிடையே சிறு சிறு தகராறு ஏற்படுகிறது. இது பாலியல் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. ஒருவரை ஒருவர் வெறுக்கும் தம்பதிகள், உடலுறவில் இருந்து விலகி இருப்பார்கள். ஆனால் உடலுறவு என்பது மருந்து போன்றது. உடலுறவு மன அழுத்தத்தை குறைக்கிறது. இது எண்டோர்பின், டோபமைன் மற்றும் செரோடோனின் போன்ற ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
திருப்தி இல்லாமை
சிலர் தங்கள் துணையுடன் உடலுறவு கொள்ளும்போது திருப்தி அடைவதில்லை. குறிப்பாக ஒருவரை மற்றொவர் முழுமையாக திருப்தி படுத்தமுடியாத நிலையில், அவர்கள் உடலுறவு மீதான ஆர்வத்தை இழக்கிறார்கள். ஆண்களுக்கு விறைப்புத்தன்மை இன்மை, முன்கூட்டிய விந்து வெளியேற்றம், மேலும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனை, பிறப்புறுப்பு வறட்சி, போன்றவை பாலுணர்வை குறைக்கிறது. இந்தக் குறைபாடுகள் அனைத்திலும் தம்பதியிடையே கருத்து வேறுபாடுகள் மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
ஆகையால் இதை தவிர்க்க, போதுமான இடைவெளியில் மனதார வைத்துக்கொள்ளும் உடலுறவு மிகவும் நல்லது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
உங்க துணையிடம் இந்த பழக்கங்கள் இருந்தால் பயப்படாதீங்க.. தம்பதிகளே கண்டிப்பா இதை படிங்க..