
ஹோட்டல்கள் காலத்துக்குக் காலம் மாறி வருவதைப் பார்த்திருக்கிறோம். இருப்பினும், புனேவில் உள்ள டோராப்ஜி அண்ட் சன்ஸ் என்ற உணவகம் 1878 முதல் ஒரே மெனுவைப் பயன்படுத்துகிறது.
ஒரே உணவை எத்தனை முறை சாப்பிடலாம்? சுவையாக இருந்தாலும், அது காலப்போக்கில் போர் அடிக்கத் தொடங்குகிறது. அதனால்தான் ஹோட்டல்கள் அவ்வப்போது மெனுவை மாற்றி வித்தியாசமாக உணவைத் தயாரித்து வழங்குகின்றன. சில ஹோட்டல்கள் மெனுவை மட்டும் புதுப்பிக்காமல், ஹோட்டலின் தோற்றத்தையே புதுமையாக மாற்றுகிறார்கள். ஆனால் ஒரு ஹோட்டலில் மட்டும் 1878 முதல் இப்போது வரை ஒரே மெனு உள்ளது.
யார் இந்த மாதா ஹரி? ஜெர்மனி நாட்டுக்கு ஆதரவாக பிரான்ஸ் நாட்டுக்கு சவாலாக இருந்த நடன மங்கை!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள டோராப்ஜி அண்ட் சன்ஸ் என்ற உணவகம் 1878 முதல் ஒரே மெனுவைப் வைத்திருக்கிறது. 1878-ல் சொராப்ஜியால் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டலை இப்போது அவருடைய பேரன் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் பார்சி பாணி அசைவ உணவைப் பரிமாறுகிறார்கள். பெரும்பாலும் மூத்த குடிமக்கள் இந்த ஹோட்டலின் வழக்கமான வாடிக்கையாளர்களாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
Viral Video: புது மாப்பிள்ளைக்கு சிகரெட், பான் மசாலா கொடுத்து வரவேற்கும் மாமியார்!
டோராப்ஜி அண்ட் சன்ஸ் உரிமையாளர் டேரியஸ் டோராப்ஜி கூறுகையில், “இன்றும் பல மூத்த குடிமக்கள் இங்கிருந்துதான் உணவு வாங்கிச் செல்கிறார்கள் என்கிறார். அவரது தந்தை மர்ஜபன் டோராப்ஜி ஹோட்டலின் பொறுப்பை ஏற்றதில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.
“நான் அவர்களுடன் நல்ல உறவைப் பேணுகிறேன். ஏனென்றால், எங்கள் ஹோட்டல் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பைபும் எனக்குத் தெரியும்” என்கிறார் டேரியஸ்.
டோராப்ஜி உணவகம் 1878 இல் டேரியஸின் பெரியப்பா சொராப்ஜி டோராப்ஜியால் தொடங்கப்பட்டது. குஜராத்தின் நவ்சாரியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சொராப்ஜி, தனது சகோதரர் பெஸ்டோன்ஜி டோராப்ஜியுடன் புனேவுக்கு பிழைப்பு தேடி வந்து இந்த ஹோட்டலைத் தொடங்கினர். அது நூற்றாண்டைத் தாண்டியும் வாடிக்கையாளர்களின் தொடர்ந்த ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.
Qatar Cabins: துருக்கி, சிரியாவுக்கு 10 ஆயிரம் ரெடிமேட் வீடுகள் வழங்கும் கத்தார்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.