முகப்பொலிவிற்கு இந்த ஒரு விதை போதும்: ஆச்சரியம் அளிக்கும் பயன்கள்!

Published : Sep 16, 2022, 06:51 PM IST
முகப்பொலிவிற்கு இந்த ஒரு விதை போதும்: ஆச்சரியம் அளிக்கும் பயன்கள்!

சுருக்கம்

முக அழகை ஒரே இரவில் மாற்றி விட ஒரு சிறிய விதையே போதுமானது. அந்த விதை வேறொன்றும் இல்லை, எள்ளு தான்.

இன்றைய நவீன உலகில் பலரும் முகத்தின் அழகை மெருகூட்ட பல வழிகளை நாடிச் செல்கின்றனர். நம்மில் சிலரோ செயற்கை முறைகளையே பயன்படுத்துகின்றனர். ஆனால், இது தற்காலிகமாக முறை தான். இருப்பினும், முக அழகை ஒரே இரவில் மாற்றி விட ஒரு சிறிய விதையே போதுமானது. அந்த விதை வேறொன்றும் இல்லை, எள்ளு தான்.

எள்ளைப் பயன்படுத்தி ஒரு சில தினங்களிலேயே முக அழகை பளபளவென மாற்றி விட முடியும். எள்ளைப் எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளை நாம் இங்கு காண்போம்.

முதலில் எள்ளை பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த எள்ளுடன் பன்னீர் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து விடவும். பிறகு, இந்தக் கலவையை முகத்தில் தினமும் தடவி வந்தால் முகப்பருக்கள் முற்றிலும் மறைந்து விடும்.

1 ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் எடுத்து கொண்டு, இதனுடன் ஆப்பிள் சீடர் வினிகர் சிறிதளவு சேர்த்து கொண்டு முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்களை தீர்த்து விடலாம்.

நல்லெண்ணையை அரிசி மாவுடன் கலந்து கொண்டு, பிறகு இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பாக மின்னும். அதோடு, முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி மிகவும் மென்மையான சருமத்தை தரும்.

Leg Pain : ''கால் வலியா?'' - அலட்சியம் வேண்டாம்! - சில வீட்டு வைத்திய முறைகள் இங்கே!!

பிரவுன் சுகருடன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, இதனுடன் யுகலிப்டஸ் எண்ணெய் சிறிதளவு சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கருமைகள் அனைத்தும் மாயமாய் மறைந்து விடும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் '''ஈரல் வறுவல்''!!

முகப்பொலிவிற்கு, செயற்கை முறைகளை நாடாமல், எளிதாக கிடைக்கும் இயற்கை பொருட்களை கொண்டே நாம் தீர்வு காணலாம். இதைப்போல, சிறிய எள் விதையில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை அறிந்து கொண்டீர்களா? எள்ளின் மகத்துவம் அறிந்து அதனை முறையாகப் பயன்படுத்த வேண்டியதும் அவசியமான ஒன்று.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்