உங்களிடம் நெகட்டிவ் வைப்பரேஷன் இருப்பதுபோல உணர்கிறீர்களா? அப்போது இதப்படிங்க முதல்ல..!!

By Dinesh TGFirst Published Sep 15, 2022, 10:30 PM IST
Highlights

ஒருவரும் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து வந்தால், அவருடைய உடல் சோர்வுற்று நலிந்து காணப்படும். குறிப்பிட்டவர்களுக்கு அவ்வப்போது உடல் பலவீனமடைவது, மனமும் வலிமையின்றி காணப்படுவது போன்ற நெகட்டிவ் வைப்ரேஷன்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளாகும். எந்தவிதமான நோய் பாதிப்புமில்லாமல், உடல் சோர்வுற்று இருப்பதை தமிழில் பீடை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத ஆற்றலை எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஓட ஓட விரட்டலாம்.
 

மனம் தான் காரணம்

உங்களைச் சுற்றி எதிர்மறையான ஆற்றல் அதிகரிப்பதுக்கு, உங்களுடைய மனம் தான் முதன்மையான காரணமாகவுள்ளது. அதனால் எப்போதும் உங்களுடைய மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நல்லவிதமான எண்ணங்களை உங்களுக்குள் கொண்டுவாருங்கள். ஒருவேளை உங்களையும் மீறி தொடர்ந்து ஏதேனும் எதிர்மறை எண்ணங்கள் உருவானால், அதைப் போக்குவதற்கு நடைப் பயிற்சி செய்யுங்கள், நல்ல இசையை கேளுங்கள், தமிழ் பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை கேளுங்கள் அல்லது நலிந்தவருக்கு பண ரீதியாகவோ பொருள் ரீதியாகவோ உடல் உழைப்பு ரீதியாகவோ உதவி செய்யுங்கள். இதன்மூலம் உங்களுக்குள் ஏற்பட்டுள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகும். உங்களைச் சுற்றி நேர்மறையான சூழல் உருவாகும்.

மனோபலம் பெறுங்கள்

எப்போதும் எதிர்மறை எண்ணங்களை சிந்தித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு, மனோபலம் குறைந்துவிடும். எதற்கெடுத்தாலும் அஞ்சுவார்கள், எந்த காரியத்தைச் செய்யும் துணிவின்றி இருப்பார்கள். இப்படி மனோபலம் குறைந்துபோனவர்களுக்கு அவ்வப்போது மனம் சோர்வுறும். இது அவர்களுடைய வாழ்க்கையிலும் எதிரொலிக்கத் துவங்கும். இதை நீக்குவதற்கு மனோபலத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை மிகுந்த பேச்சுகளை கேட்பது, வாழ்க்கையில் போராடி வெற்றிப் பெற்றவர்களின் வாழ்க்கைச் சரித்தரத்தை படிப்பது மற்றும் தன்னம்பிக்கை வளர்க்கும் திரைப்படங்களை பார்ப்பது உள்ளிட்டவை மனோபலத்தை வளர்த்தெடுக்கும்.

மது அருந்துவதால் பல நன்மைகளும் ஏற்படும்- உங்களுக்கு தெரியுமா??

பலன் தரும் பயிற்சி முறைகள்

மனோபலம் இல்லாமல் இருப்பவர்கள் அமாவாசை மற்றும் சனிக்கிழமை இரவுநேரங்களில் குறிப்பிட்ட பயிற்சி முறைகளில் ஈடுபடலாம். ஒரு வாலியில் வெதுவெதுப்பான தண்ணீரை கால் பங்கு ஊற்றி, அது கை பொறுக்கும் சூட்டுக்கு வந்தவுடன் கல் உப்பு, ஒரு கைப்பிடி வேப்பில்லை, சிறுதுளி மஞ்சள் தூள், 2 அல்லது 3 மிளகு, மருதாணி விதைகள் உள்ளிட்டவற்றை சேர்க்கவேண்டும். தெய்வாம்சம் பொருந்திய இந்த பொருட்களை சேர்த்த பிறகு உங்களுடைய கால்களை அதற்கு மூழ்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி 20 நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால். எதிர்மறை ஆற்றல் உங்களை விட்டு நீங்கும். அதாவது இதை பயிற்சி என்று கூறுவதை விடவும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் ஆற்றலை விரட்டுவதற்கான பரிகாரமாகவும் இதை கருதலாம். 

விதுர் நீதி: இம்மூவருக்கும் கடன் கொடுத்தால் எதுவும் திரும்ப வராது- யார் அவர்கள்?

இப்படி செய்வதால் நமக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறகும். அதை தொடர்ந்து நம்மைச் சுற்றியுள்ள பீடை, தரித்திஅம் போன்றவை ஒழியும். இந்த பரிகாரப் பயிற்சியை ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் அமாவாசை இரவு நாட்களில் செய்து வந்தால், நிச்சயம் பலன் கிடைக்கும். எந்த பிரச்னை வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்வீர்கள். 

click me!