இவ்ளோ நன்மைகளா சைக்கிள் ஓட்டுவதால்!

First Published May 31, 2017, 11:17 AM IST
Highlights
This much of goodness is there in cycling!


நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழைய பொருட்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில், நம் உடலை வலிமையாக்குவதாக இருந்தது. ஆனால், இன்று அவையெல்லாம் நம் வீட்டின் பரணிலோ அல்லது ஏதோ ஒரு மூலையிலோ இருக்கின்றன. இன்னும் சிலர், அவை எதற்கு என்று பழைய இரும்புக் கடையில் போட்டுவிட்டு இடத்தைக் காலியாக வைத்துள்ளனர். இப்படி பலரால் மதிக்கப்படாமல் இருக்கும் ஒரு வாகனம்தான் சைக்கிள்.

சைக்கிள் அறிமுகம்

Latest Videos

முதன்முதலாக 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமான சைக்கிள், தற்போது உலகம் எங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமாக உள்ளன. 1839-ல் மேக்மில்லன் என்பவரால் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. 

ஆரம்பத்தில், ‘வெளாசிபிட்’ என்று பெயரிடப்பட்டு, பிற்காலத்தில் சைக்கிள் என மாறியது. பின்னர் டன்லப் என்பவரால் ரப்பர் சக்கரம் கொண்டதாக, சைக்கிள் மாற்றியமைக்கப்பட்டது. சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம் போன்ற நாடுகளில் சைக்கிள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

போக்குவரத்துக்கும் முதன்மையானதாக உள்ளது. போக்குவரத்துத் தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளாகவும் சைக்கிள் உள்ளது. மேலை நாடுகளில் உயர் பதவிகள் வசிக்கும் செல்வந்தர்கள்கூட தினந்தோறும் தங்கள் அலுவலகங்களுக்கு சைக்கிளிலேயே பயணிக்கின்றனர். 

இதனால், அவர்களுடைய ஆரோக்யம் நன்றாக இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தங்கள் அலுவலகங்களுக்கும், மாணவர்கள் பள்ளிகளுக்கும் சைக்கிளில் செல்வதைத்தான் விரும்புகின்றனர். சாலைகளில் இருபுறமும் சைக்கிள் செல்வதற்கு நேர்த்தியாகத் தளம் அமைத்து, சைக்கிளில் செல்வதை ஊக்குவிக்கிறார்கள்.

சைக்கிள் ஓட்டுவதால் நன்மைகள்:

சைக்கிளிங் செய்வதால், உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து, ஹிப்போகேம்பஸ் பகுதியில் புதிய செல்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது.

இதனால், நினைவாற்றல் மேம்படும். வாரத்துக்கு 5 நாட்கள் சராசரியாக 30 நிமிடங்கள் சைக்கிளிங் செய்வது நல்லது. அரை மணி நேர சைக்கிளிங் பயிற்சியில் 300 கலோரிகள் வரை எரிக்கப்படும். சைக்கிளிங் செய்யும்போது முதல் 10 நிமிடங்களில் உடலில் இருக்கும் நீர் வெளியேறும். 20 நிமிடங்களுக்குப்பிறகு குளுக்கோஸ் எரிக்கப்படும். 30 நிமிடங்களுக்குப்பிறகு கொழுப்புச் சத்து குறையும்.

சைக்கிளிங் நமது உடலை ஃபிட்டாக வைக்க உதவும் எளிய பயிற்சி. இதயத் துடிப்பை அதிகப்படுத்துவதோடு, இதயத்தை வலுப்படுத்துகிறது. எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவாக்குகிறது. தசைகளை வலிமையாக்குகிறது. உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கிறது. 

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கிறது. பாதத்தால் சைக்கிளை மிதிப்பதால் கால் தசைகள் கூடுதல் பலம் பெறுகின்றன. தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் கை, கால் தசைகள் உறுதி பெறுகின்றன. உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைக்கின்றன. உடல் வெப்பத்தையும், வியர்வையையும் வெளியேற்றுகிறது.

சைக்கிள்களில் பல வகைகள் உள்ளன. அதில், நம் உடல் அமைப்புக்கும், வயதுக்கும் பொருத்தமான சைக்கிள்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. நிற்கும்போது, நம்முடைய இடுப்பு உயரத்துக்கு சீட் இருக்க வேண்டும்.

 சீட் உயரம் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். முதல் முறையாக சைக்கிளிங் செய்பவர்கள் மெதுவாகத் தொடங்கி நன்கு பழகிய பிறகு, வேகத்தையும், தொலைவையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

click me!