
அனைவருக்குமே தங்களது இல்வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு உங்கள் மனைவிக்கு நீங்கள் அவரை எப்போதும் காதலிக்கிறீர்கள், காதலிப்பீர்கள் என்பதை உணர்ந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்கள் காதலை வெளிக்காட்ட தெரியவில்லையா?
இதோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை முழு மனதோடு உங்கள் மனைவிக்கு செய்யுங்கள். அப்பறம் என்ன எப்போதும் உங்கள் மனைவி ஒரே குஷியாக இருப்பார்.
1. மார்பில் சாய்த்துக்கொள்ளுங்கள்
உடல் ரீதியான தேவைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடும். உங்கள் மனைவியை மார்பில் சாய்த்துக்கொள்ளுதல் அவருக்கு மிகவும் பிடிக்கும்.
2. இரவு உணவு உங்கள் பொறுப்பு
3. குழந்தைகளை வெளியே அழைத்து செல்லுங்கள்
குழந்தைகள் என்றாலே சேட்டைகளுக்கு பஞ்சமா இருக்கும்? உங்கள் மனைவியால் குழந்தைகளை கவனித்துக்கொண்டு வேலையையும் பார்க்க சிரமமாக உணரும் போது உங்கள் குழந்தைகளை ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேலாக வெளியே அழைத்து செல்லுங்கள். இது உங்கள் மனைவிக்கு அவரது வேலைகளை சிரமமின்றி முடிக்க உதவியாக இருக்கும்.
4. ஜென்டில் மேன்
5. பாராட்டுங்கள்
உங்கள் மனைவி அழகாக இருக்கிறார் என்று தோன்றுகிறதா? அவர் நகைச்சுவையாக பேசிகிறார் என்று தோன்றுகிறதா? அப்ப உடனே அவரை புகழ்ந்து பாரட்டுங்கள்
6. அவருடன் வேண்டுங்கள்
7. வெளியே அழைத்து செல்லுங்கள்
8. அவரை தூங்க வையுங்கள்
தினமும் குழந்தைகளை கவனித்து கொள்வதால் அவர்களால் சரியாக தூங்க முடியாது. எனவே நீங்கள் வீட்டில் இருக்கும் போது குழந்தைகளை நீங்கள் கவனித்துக்கொண்டு உங்கள் மனைவியை தூங்க வையுங்கள்.
9. அவரது பொழுதுபோக்குகளை ஊக்குவியுங்கள்
10. மன்னிப்பு கேளுங்கள்
பொதுவாக ஆண்கள் சண்டை வரும் போது ஒரு மணிநேரம் அல்லது ஒரு இரவில் சண்டையை மறந்து அந்த விஷயத்தை தூக்கி எரிந்துவிடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை அதை மனதில் நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். எனவே உங்கள் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்துவது அவசியம்
11. கையை பிடித்துக்கொள்ளுதல்
12. மரியாதை
உங்கள் மனைவிக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளுங்கள். சண்டை வரும் போது கூட கெட்ட வார்த்தைகளையோ அல்லது அவரை காயப்படுத்தும் வார்த்தைகளையோ கூறாதீர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.