இனி நீங்க பட்ஸ் யூஸ் பண்ணவே மாட்டீங்க!

Asianet News Tamil  
Published : May 29, 2017, 10:29 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
இனி நீங்க பட்ஸ் யூஸ் பண்ணவே மாட்டீங்க!

சுருக்கம்

From now you wont use the buds

காது குடைவது யாருக்கு தான் பிடிக்காது. 99% அனைவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது காது குடைந்து விடுவார்கள். 

அது தரும் சுகமே தனி. ஆனால், காதை உட்புறத்தில் சுத்தம் செய்வது தவறென மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், காதில் இருந்து நாம் அழுக்கு என எண்ணி சுத்தம் செய்யும் மெழுகு போன்ற பொருள் தான் காதின் ஆரோக்கியத்தை காக்கும் பொருளாகும். 

முக்கியமாக பட்ஸ், ஹேர் பின், கருவேப்பிலை குச்சி என எதையும் காது குடைய பயன்படுத்த வேண்டாம்..

அது தரும் சுகமே தனி!

 காது குடைவது என்பது நம்மில் பலருக்கு ஒரு சுகானுபவம் தான். அது ஹேர் பின்னாக இருக்கட்டும், கருவேப்பிலை குச்சியாக இருக்கட்டும், 

பட்ஸாக இருக்கட்டும். அது தரும் சுகமே தனி. இதற்காகவே சிலர் குளித்து முடித்து வந்தவுடன், அழுக்கை அகற்றுகிறேன் என காது குடைய ஆரம்பித்துவிடுவார்கள்.

மருத்துவர்கள் எச்சரிக்கை! 

ஆனால், மருத்துவர்களோ, நமது காதுகளையும், அதன் மென்மையான உள் பாகங்களையும் பாதுகாப்பதே அந்த மெழுகு போன்ற ஒன்று தான்.

 அது அழுக்கு அல்ல. எனவே, காதை உட்புறமாக குடைய வேண்டாம் என்கின்றனர். அதற்கு மாறாக, வெளிப்புற காதை மட்டும் சுத்தம் செய்துக் கொள்ளலாம்.

பட்ஸ் ஏன் கூடாது… 

இந்தியாவை சேர்ந்த ஈ.என்.டி., மருத்துவர் குனால் அவரிடம் சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவரை பரிசோதித்த போது, அவரது காதுக்குள் பஞ்சு அடைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அதை அவர் கருவிகள் கொண்டு தான் அகற்றினார்.

மற்றவை…. 

பஞ்சுக்கே இப்படி என்றால், ஹேர் பின், கருவேப்பிலை குச்சி போன்றவை மென்மையான, சென்சிடிவான காதின் உள் பகுதிகளை காயங்கள் உண்டாக காரணமாகிவிடும். 

எனவே, காதின் உட்பகுதியை சுத்தம் செய்வதை தவிர்த்து விடுங்கள். அது தான் காதுக்கும் நல்லது. மற்றபடி, அழற்சி பல தெரிந்தால், மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்