பில்லி, சூனியம், வசியம் யாருக்கு எல்லாம் பலிக்காது? தெரிந்து கொள்ளுங்கள்

 
Published : May 29, 2017, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
பில்லி, சூனியம், வசியம் யாருக்கு எல்லாம் பலிக்காது? தெரிந்து கொள்ளுங்கள்

சுருக்கம்

From whom Spell does not succeed

பில்லி, சூனியம், வசியம் எல்லாம் இன்னும் இருக்கிறதா என்ன? என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தால். நீங்கள் கேரளாவில் சிறிய சுற்று பயணம் மேற்கொண்டு வந்தால் நன்கு அறியலாம்.

இன்னும், ஒரு சில இடங்களில் சூனியம் செய்வதும், வைப்பது, எடுப்பது எல்லாம் பட்டப்பகலில் நாம் அங்கே காண முடியும். இதில், பில்லி, சூனியம், வசியம், மனோ வசியம் என பல வகைகள் இருக்கின்றன.

எதை எதை, எதற்கெல்லாம் செய்கிறார்கள். யாருக்கு எல்லாம் இந்த தாக்கம் ஏற்படாது என அவர்கள் கூறும் சில தகவல்கள்

எதிரி!

ஒருவர், தனக்கு பிடிக்காத நபர் அல்லது விரோதிகளுக்கு, வாழ்வில் தோல்வி அடைய வேண்டும், நஷ்டம் அடைய வேண்டும், துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக செய்வது பில்லி, சூனியம்.

மூளை கட்டு!

ஒரு நபரின் மூளையை மட்டும் கட்டுப்படுத்தி, குழப்பி, நம் பேச்சை மட்டும் கேட்டு, தலையாட்டி பொம்மை போல இயங்குவதற்கு செய்வது பில்லியாம்.

வசியம்!

ஆண், அல்லது பெண்ணை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு செய்யப்படுவது வசியம் என கூறப்படுகிறது.

சூனியம்!

ஒரு நபரை அளிக்க வேண்டும் என்றால் அதற்கு சூனியம் வைக்கிறார்கள். அதற்கு அந்த நபரின் துணி, காலடி மண் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

மாந்திரீகம்!

தோல்வி, நஷ்டம், துன்பம், அழிவு என ஒருவருக்கு எல்லா வகையிலும் தீங்கு ஏற்படுத்த மாந்திரீகம் செய்கிறார்கள். இதற்கான சிறப்பு பூஜைகள் செய்து வசியம் செய்யும் நபருக்கு அளிக்கிறார்கள்.

மாந்திரீகம் செய்யப்பட்ட பொருளை, அந்த நபர் வாழும் வீட்டில் அல்லது அலுவலகத்தில் மறைத்து வைத்து விடுவார்களாம்.

இன்டர்நெட் வசியம்!

வசியம் செய்ய நினைக்கும் நபரை, இன்டர்நெட் மூலமாக கூடி பேசி மனோவசியம் செய்யலாம் என ஒரு பிரிட்டிஷ் வசிய நிபுணர் கூறுகிறார்.

சந்திரன்!

எந்த ஒரு நபரின் ஜாதகத்தில் சந்திரன் பலம் இல்லா நிலையில் இருக்கிறதோ, அவர்களை தான் வசியம் செய்ய முடியுமாம். சந்திரன் பலமாக இருந்தாம் வசியல் செய்ய முடியாதாம்.

யார், யாருக்கு?

வேதம் ஓதுபவர்கள், சாமியார்கள், குருக்கள் போன்றவர்கள் மத்தியில் மாந்திரீகம் பலன் அளிக்காதாம். அதே போல தினமும் யோகா, தியானம் செய்யும் நபர்கள் மத்தியில் மனோவசியம் பலன் தராதாம்.

குல தெய்வம்!

குல தெய்வங்களை வணங்கி வரும் நபர்கள் மத்தியில் மாந்திரீகம் எந்த தாக்கத்தையும் உண்டாக்காது என்றும் மாந்திரீக செயல்களில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். அதே போல, மனதை ஒருநிலைப்படுத்த தெரிந்த யாரிடமும் மனோவசியம் வேலை செய்யாது என கூறுகின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்