அடிக்கடி கை, கால் மரத்துப் போவதற்கு இதுதான் காரணம்.. இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க..

By Ramya s  |  First Published Jul 12, 2023, 1:22 PM IST

ரத்த ஓட்டம் தடைபடுவதால் வலி, தசைப்பிடிப்பு, உணர்வின்மை, செரிமான பிரச்சினைகள் மற்றும் கைகள் அல்லது கால்கள் மரத்துப் போவது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.


நம் உடலின் செயல்பாட்டிற்கு ரத்த ஓட்டம் மிகவும் அவசியமானது. ஏனெனில் இது உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதன் காரணமாகவே உடல் உறுப்புகளின் தமது வேலையை சரியாக செய்கின்றன. மோசமான இரத்த ஓட்டம் இதயம், சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் கோளாறுகளை ஏற்படுத்தும். உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கல் இல்லை எனில்,  அவற்றின் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதன் மூலம் பல நோய்கள் ஏற்படுகின்றன.

ரத்த ஓட்டம் தடைபடுவதால் வலி, தசைப்பிடிப்பு, உணர்வின்மை, செரிமான பிரச்சினைகள் மற்றும் கைகள் அல்லது கால்கள் மரத்துப் போவது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். எனினும் ஒரு சில உணவுகள் மூலம் வே ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். எனவே சரியான ரத்த ஓட்டத்தை உறுதிசெய்ய ஒருவர் செய்ய வேண்டிய சில பயனுள்ள உணவு மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

 

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மீன்

மீனில் உள்ள ஒமேகா -3 அமிலங்கள் செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும், அவை ரத்தக் குழாய்களை இரத்தக் கட்டிகளிலிருந்து தடுக்கின்றன. ரத்த அழுத்தத்தை பராமரிக்கின்றன, இது இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை எளிதாக்குகிறது. வஞ்சரம் கானாங்கெளுத்தி, சூரை மற்றும் ட்ரவுட் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்துள்ளன.

சிட்ரஸ் பழங்கள்

அதிகப்படியான கார்போஹைட்ரேட் இல்லாமல் உங்கள் உணவில் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குவதால் சிட்ரிக் அமிலம் நன்மை பயக்கும். இது ரத்தம் கட்டியாவதை நீக்கி, ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களில் சிட்ரஸ் அமிலம் அதிகமாக உள்ளது.

நட்ஸ்

பொதுவாக நட்ஸ்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. அவை மெக்னீசியம், பொட்டாசியம், அர்ஜினைன் மற்றும் கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளன. அர்ஜினைன் நைட்ரிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது, இது இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுவதுடன் மேம்பட்ட சுழற்சிக்கு உதவுகிறது. வால்நட், ஹேசல்நட், முந்திரி மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் அர்ஜினைன் அதிகம் நிறைந்துள்ளது.

வெங்காயம் மற்றும் பூண்டு

உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியம் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இந்த இரண்டு பிரச்சனைகளுக்குமே பூண்டு உதவுகிறது, ஏனெனில் அதில் சல்பர் கலவை உள்ளது, இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த நாளங்களைத் தளர்த்துவதால் இரத்த ஓட்டத்தை பராமரிக்கவும் உதவுகிறது. வெங்காயத்தில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை இரத்த ஓட்டத்திற்கு நேரடியாக உதவுகின்றன.

நீரிழிவு நோய்க்கு உடல் எடையை குறைப்பதே ஒரே தீர்வு? கட்டுக்கதைகளும் உண்மையும்..

click me!