இஸ்ரேலில் உள்ள நெகேவின் பென்-குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஃபைப்ரோமியால்ஜியாவின் பாதிப்பு அதிகரித்து வருவதாக ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்
ஃபைப்ரோமியால்ஜியா (fibromyalgia) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன்கூட்டியே இறக்கும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. தொடர்ச்சியான பரவலான வலி மற்றும் சோர்வை ஏற்படுத்தும் கடுமையான நாள்பட்ட வலியை குறிக்கும் நிலையே, ஃபைப்ரோமியால்ஜியா என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரேலில் உள்ள நெகேவின் பென்-குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஃபைப்ரோமியால்ஜியாவின் பாதிப்பு அதிகரித்து வருவதாக ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்; இருப்பினும், இந்த நிலைக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஃபைப்ரோமியால்ஜியா என்பது சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலைப் பிரச்சினைகளுடன் பரவலான தசைக்கூட்டு வலியால் வகைப்படுத்தப்படும் ஒரு கோளாறு என வரையறுக்கிறது. ஃபைப்ரோமியால்ஜியா உங்கள் மூளை மற்றும் தண்டுவடம் வலி மற்றும் வலியற்ற சமிக்ஞைகளை செயலாக்கும் விதத்தை பாதிப்பதன் மூலம் வலிமிகுந்த உணர்வுகளை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அதிக வெப்பம் இல்ல.. மிதமான வெப்பம் கூட இதயத்தை பாதிக்கும்.. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்த நிலை பெரும்பாலும் வாத நோய், குடல், நரம்பியல் மற்றும் மனநலக் கோளாறுகள் உள்ளிட்ட பிற உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைந்துள்ளது என்பதற்கான அங்கீகாரம் அதிகரித்து வருகிறது, இது ஆரம்பகால மரணத்திற்கு வழிவகுக்கிறது. இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் 1999 மற்றும் 2020 க்கு இடையில் வெளியிடப்பட்ட 6 தொடர்புடைய ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளை மதிப்பாய்வு செய்தனர், மேலும் மொத்தம் 188,751 பெரியவர்களை இந்த ஆய்வு உள்ளடக்கியது. ஃபைப்ரோமியால்ஜியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 27% இறப்பு விகிதம் அதிகம் என்று என்று ஆய்வு காட்டுகிறது.
குறிப்பாக, புற்றுநோயால் இறப்பதற்கான ஆபத்து அதே வயதுடைய பொது மக்களுக்கு இருந்ததை விட 12 சதவீதம் குறைவாக இருப்பது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆர்எம்டி ஓபன் என்ற இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள், இந்த அபாயங்களைக் குறைக்க நோயாளியின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிக்க ஆராய்ச்சியாளர்களை தூண்டியுள்ளது..
ஆய்வாளர்கள் இதுகுறித்து பேசிய போது "மருத்துவ ஊழியர்கள் ஃபைப்ரோமியால்ஜியாவை ஒரு மருத்துவ நிலையாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, மேலும் அவர்கள் இந்த நோயாளிகளுடன் தொடர்புகொள்வது மற்றும் அவர்களின் கோளாறைச் சமாளிப்பது உணர்ச்சி மற்றும் உளவியல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்" என்று தெரிவித்தனர்.
"ஃபைப்ரோமியால்ஜியா பெரும்பாலும் 'கற்பனை நிலை' என்று அழைக்கப்படுகிறது, இந்த நோயறிதலின் நியாயத்தன்மை மற்றும் மருத்துவப் பயன் பற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன. தற்கொலை எண்ணம், விபத்துகளைத் தடுப்பதில் குறிப்பாக கவனம் செலுத்துவதன் மூலம் ஃபைப்ரோமியால்ஜியா நோயாளிகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான கூடுதல் ஆதாரத்தை வழங்குகிறது.
கிடைக்கக்கூடிய தரவுகளிலிருந்து தெளிவான முடிவுகளை எடுக்க முடியாது. பகுப்பாய்வில் அடையாளம் காணப்பட்ட அபாயங்கள் "அதிக பரவலான நிலையில் கொடுக்கப்பட்ட ஒரு தீவிரமான பொது சுகாதாரப் பிரச்சினையைக் குறிக்கலாம்" என்று தெரிவித்தனர்.
நீரிழிவு நோய்க்கு உடல் எடையை குறைப்பதே ஒரே தீர்வு? கட்டுக்கதைகளும் உண்மையும்..