பொங்கலிட சிறந்த நேரம் இதுதான்..! "பொங்கலோ பொங்கல்"..!

By ezhil mozhiFirst Published Jan 14, 2019, 2:10 PM IST
Highlights

பொங்கல் பண்டிகையைசிறப்பாக கொண்டாட தமிழக மக்கள் ஆயத்தகமாகி வருகின்றனர். இன்று போகி பண்டிகை என்பதால் விடியற்காலையிலேயே தங்கள் குடும்பத்துடன் வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு எரித்து போகி பண்டிகை கொண்டாடினர். 

பொங்கலிட சிறந்த நேரம் இதுதான்..! "பொங்கலோ பொங்கல்"..!  

பொங்கல் பண்டிகையைசிறப்பாக கொண்டாட தமிழக  மக்கள்  ஆயத்தகமாகி வருகின்றனர். இன்று போகி பண்டிகை என்பதால் விடியற்காலையிலேயே தங்கள் குடும்பத்துடன் வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு எரித்து போகி பண்டிகை கொண்டாடினர். 

நாளை பொங்கல் என்பதால், புத்தாடை அணிந்து பொங்கலை வரவேற்க காத்திருக்கின்றனர். சரி வாங்க பொங்கல் வைக்க சரியான நேரம் என்ன என்பதை பார்க்கலாம்.

நாளை  தாய் பொங்கல் என்பதால், விவசாய பெருமக்கள் தாங்கள் விவசாயம்  செய்து அதன் மூலம்  ஈட்ட அரிசி பருப்பு என இவைகளை  பயன்டுத்தி பொங்கலிட்டு வழிபடுவார்கள். இவ்வாறு பொங்கலிடும் போது சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, அந்த பொங்கலை மாட்டுக்கு கொடுத்து தங்களது நன்றியை செலுத்துவார்கள்.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பொங்கலை நாம் எந்த நேரத்தில் செய்ய வேண்டும் தெரியுமா..?

காலை 8 மணி முதல் 9. மணி வரை 

காலை 10.30 மணி முதல் 11 மணி வரை 

பகல் 12 மணி முதல் 1 மணி வரையிலும் பொங்கல்  வைக்கலாம். இதேபோன்று, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் பொங்கலிடலாம்.
இருந்தாலும் பொதுவாகவே காலை நேரத்தில் பொங்கலிடுவதை தான் பெரும்பாலான மக்கள் விருப்பம் தெரிவிப்பார்கள். எனவே மேற்குறிப்பிட்டுள்ள நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து, அந்த குறிப்பிட்ட நேரத்தில் பொங்கலிட்டு வழிபடலாம்.

"பொங்கலோ பொங்கல்"..!  

click me!