தோலுடன் சேர்த்து வாழைப்பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா? உங்கள் ஆசை இனி இனிதே நிறைவேறப்போகிறது. ஆம், ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள், வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ‘மோங்கே’ என்ற இந்த வாழைப்பழத்தை தோலுடன் சேர்த்து அப்படியே சாப்பிடலாம்.

வழக்கமான வாழைப்பழங்களில் தோலை நீக்கிய பிறகே வாழைப்பழத்தைச் சாப்பிட முடியும். தோலில் கசப்புச் சுவை இருக்கும் என்பதால், அதை சாப்பிட யாரும் விரும்புவதில்லை. ஆனால் மோங்கே வாழைப்பழத்தின் தோல் மிக மெல்லியதாகவும் கசப்பு சுவை தெரியாமலும் உள்ளது. எனவே இந்த வாழையின் தோலைச் சாப்பிட முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.
புதிய டிஎன்ஏவை வைத்து, ஜப்பானின் குளிர் மிகுந்த பிரதேசத்தில் இதை உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். ஜப்பானின் மிகக் குளிர்ந்த பிரதேசத்தில் மோங்கே வாழை விளைவிக்கப்படுவதால், இவற்றுக்கு இயற்கையான எதிரிகள் கிடையாது. அதனால் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை என்கிறார்கள் ஜப்பான் விவசாயிகள். பழத்தின் சுவையும் அபாரமாக உள்ளதால், மோங்கே வாழைப்பழம் ஜப்பானில் பேசுபொருளாகிவிட்டது. கடந்த ஆண்டே இந்த வாழைப்பழம் ஜப்பான் கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஒரு பழத்தின் விலை சுமார் 350 ரூபாய்.