Horoscope: கிரகங்களின் மாற்றம், அனைத்து ராசிகளிலும் இருக்கும். இது சிலருக்கு சுபமாக இருக்கும், சிலருக்கு அசுபமாக இருக்கும் யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கிரகங்களின் மாற்றம், அனைத்து ராசிகளிலும் இருக்கும். இது சிலருக்கு சுபமாக இருக்கும், சிலருக்கு அசுபமாக இருக்கும் யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சனி பெயர்ச்சி:
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் தமிழ் வருடன் சித்திரை மாதம், அதாவது 2022 வருகிற ஏப்ரல் 29 அம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். ஆகவே, இந்த சனி பெயர்ச்சியால் சித்திரை மாதம் முழுவதும் சிலராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
மேஷம்:
இன்று உங்களுக்கு இன்பமான நாளாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்திற்கு ஏற்ப லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்க திட்டம் தீட்டப்படும். தொட்ட காரியம் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்:
உத்யோகத்தில் பணி பாராட்டப்படும். கீழ்நிலை அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். நிரந்தர சொத்து பத்திரங்கள் பெரிய பலன்களைத் தரும். பதவி உயர்வுக்கான முயற்சிகள் வெற்றி பெறும். உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் ஆன்மிக பயணம் செல்லலாம். அரசியல் தடை நீங்கி லாபம் தரும் சூழ்நிலை உருவாகும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்:
உங்களுக்கு பழைய தோழர்களுடன் சந்திப்பு ஏற்படும். எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படும். உடல்நலம் பலவீனமாக இருக்கலாம். ரிஸ்க் எடுக்கும் தைரியம் இருக்கும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
கும்பம்:
அரசு துறையில் ஆதரவை பெறுவீர்கள். அரசுப் பணிகளில் சுபகாரியங்கள் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வணிக ஒப்பந்தங்கள் இருக்கலாம். லாப வாய்ப்புகள் வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு இருக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.