Horoscope: சனி கோச்சார மாற்றத்துடன் ராகு-கேது பெயர்ச்சி கூட்டணி...செல்வம் அள்ளப்போகும் ராசிகள்..

Anija Kannan   | Asianet News
Published : Apr 19, 2022, 05:00 AM IST
Horoscope: சனி கோச்சார மாற்றத்துடன் ராகு-கேது பெயர்ச்சி கூட்டணி...செல்வம் அள்ளப்போகும் ராசிகள்..

சுருக்கம்

Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த நாள் எந்தெந்த ராசிகளுக்கு  'ஜாக்பார்ட்' யோகம் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த நாள் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் வழி ஆதரவு கிடைக்கும்.  சுய தொழிலில் எதிர்பாராத திடீர் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் எனவே கவனம் தேவை. எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. 

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கனிவுடன் பேசுவது அமைதியைக் கொடுக்கும். 

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு தொட்ட காரியங்கள் துலங்கும். இந்த நாள்உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.  தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. உழைப்பு ஏற்ற பலன் கிடைக்கும். 

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆன்மிக பெரியோரின் ஆசி கிடைக்கும். 
இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறை தேவை. குடும்பத் தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பண வரவு திருப்தி தரும். 

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சோர்வு, களைப்பு நீங்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். சுபகாரிய முயற்சிகளில் ஏற்பட்டுக் கொண்டு இருந்த தடைகள் விலகும். வீடு பராமரிப்பு செலவு திட்டமிடுவதை வித அதிகரிக்கும். 

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு சுப செலவுகள் அடுத்தடுத்து வரும். வீடு வாங்க யோகம் கிடைக்கும். தேவையற்ற கவலைகளை போட்டு மனதில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. 

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கவலைகள் விலகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். 

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பண வரவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள்.  ஆரோக்கியத்தில் சிறுசிறு குறைகள் வந்து நீங்கும். 

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப் பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பணம் ரீதியான விஷயங்களில் புதிதாக எதையும் நம்பாமல் இருப்பது நல்லது. நீண்ட நாள் நண்பர்களை சந்திப்பீர்கள். 

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள்நீண்ட நாள் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் தவிர்ப்பது நல்லது. தொலை தூர பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டாகும்.கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். 

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு வர வேண்டிய பணம் கைக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தடைபட்ட காரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன் கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். ஆரோக்கியம் மேம்படும். 

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு மறைமுக தொல்லைகள் வந்து போகலாம். புதிய நபர் ஒருவரை சந்திக்க இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்வீர்கள்.

மேலும் படிக்க...Horoscope: துலாம், கன்னி ராசியினருக்கு நிதி நிலை வலுவாக இருக்கும்...இன்றைய 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.!
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Towel Lines: டவலில் இருக்கும் கோடுகள் டிசைனுக்காக மட்டுமில்ல.! இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா.?
Cooling Plants: வீட்டை ஜில்லுனு வைக்கும் 6 செடிகள்: இந்த செடிகளை வீட்டில் வைத்தால் AC பில்லை பாதியாக குறைக்கலாம்.!