
கிரகங்களின் ராசி மாற்றம் அணைத்து ராசிகளிலும் பதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், சிலருக்கு இது சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அப்படி யார் யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
சுக்கிர பெயர்ச்சி 2022:
ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு செல்கிறார். இந்த சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
நீங்கள் இந்த சித்திரை மாதம் முழுவதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். எந்த முடிவுகளையும் ஆலோசனை பண்ணி எடுப்பது நல்லது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த சித்திரை மாதம் முழுவதும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த வந்த மந்தமான நிலை மாறும். புது வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு நீண்ட நாள் இருந்து வந்த குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சகம் ராசியினருக்கு நீண்ட நாள் எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த வந்த பிரச்சனைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயஙக்ளுக்கு நல்ல முடிவு கிடைக்கும்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.