ராகு கிரகம் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்கை பிரகாசிக்கும்...யார் கவனமாக இருக்க வேண்டும்.?

By Anu Kan  |  First Published Apr 17, 2022, 8:01 AM IST

Rahu Ketu Peyarchi 2022: நிழல் கிரகமான ராகு-கேதுவின் பெயரைக் கேட்டாலே ஒரு வித பய உணர்வு, ஏற்படுகின்றது. பொதுவாக, இந்த கிரகங்கள் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நம்பப்படுகின்றது.  


நிழல் கிரகமான ராகு மற்றும் 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறியுள்ளனர். மற்றொரு நிழல் கிரகமான கேது 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளார். நிழல் கிரகமான கேது ஒரு மர்மமான கிரகமாக கருதப்படுகிறது.

 எனினும், ராகு கேதுவைப் பற்றி அதிகமாக அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. ராகு, மனிதர்களின் முந்தைய பிறவிகளின் கர்ம பலனை அடிப்படையாகக் கொண்டு பலன் கொடுக்கும் ஒரு கிரகமாகும். 

Tap to resize

Latest Videos

ஆகவே, ஜோதிடத்தில் பல வித பரிகாரங்கள் ஒருபுறம் இருந்தாலும், நற்செயல்கள் செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ராகு கேதுவின் மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அட்டகாசமான பலன்களை கொடுக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் சஞ்சாரம் மிகவும் நன்மையாக இருக்கும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் நீங்கள் சற்று கவனமாக இருங்கள். யாருடனும் தகராறு செய்யாமல் இருப்பது நல்லது.

ரிஷபம்:

ராகு-கேதுவின் பெயர்ச்சி காலம் ரிஷப ராசிக்காரர்களின் தொழிலில் வெற்றியை தரும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். வேலையில் பதவி உயர்வு வரக்கூடும். வருமானம்  கூடும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் தேடி வரும். ராகு-கேதுவின் பெயர்ச்சி வாழ்வில் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கட்டுவது அவசியம். 

மிதுனம்:

ராகு-கேதுவின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்வில் வெற்றியை தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மனைவியின், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் -மனைவி அன்னோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் நீங்கள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். 

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். எதிர்பாராத திடீர் செலவுகள் வந்து சேரும். வாகன ரீதியான பயணங்களின் போது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு  வேண்டிய பலன் கிடைக்கும். 

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு லாபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். தொழிலில் லாபம் கிடைக்கும். 

 மேலும் படிக்க.....ராகு, கேது பெயர்ச்சியால்...12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது..? யாருக்கெல்லாம் ராஜா யோகம்..!


 

click me!